அஜித் வைரல் வீடியோ முதல் இயக்குநர் அவதாரம் தரும் யுவன் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
முக்கிய சினிமா செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு கால் பந்து போட்டி ஒன்றை காண சென்ற போது அஜித் சுவாரஸ்யமான பல தகவல்களை பார்க்கலாம்.

அஜித் வைரல் வீடியோ முதல் இயக்குநர் அவதாரம் தரும் யுவன் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
டாப் 10 சினிமா செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது.
வைரலாகும் அஜித் வீடியோ
நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு கால் பந்து போட்டி ஒன்றை காண சென்ற போது அஜித் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவில் தங்களது கருத்துகளை குஷியாக பகிர்ந்து மகிழ்கின்றனர்.
தளபதி 69 படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கும் விஜய்?
தி கோட் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ் பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதில் விஜய் காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி இணையதில் வைரலாகி வருகிறது.