வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று

வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2024 11:45 PM IST

சூர்யா சாமி தரிசனம், வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த வாழை பட நடிகர், அமரன் ஓடிடி ரிலீஸ் உள்பட டாப் தமிழ் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று
வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று

வில்லன் நடிகரின் மனைவி கைது

தெலுங்கு சினிமாவில் வில்லன் நடிகராக இருப்பவர் அஜாஸ் கான். கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி அஜாஸ் கானின் அலுவலக ஊழியர் சுராஜ் கௌத் ஐரோப்பிய நாட்டில் இருந்து 100 கிராம் மெஃபெடிரோன் (Mephedrone-MD) என்ற என்ற போதைப் பொருளை ஆர்டர் செய்திருந்தார். இந்த கொரியர் அஜாஸ் கானின் அந்தேரி அலுவலகத்துக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுராஜை சுங்கத்துறை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அஜாஸ் கான் மனைவி ஃபாலன் குலிவாலாவுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அஜாஸ் கானிந் ஜோதேஷ்வரி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டதில் 130 கிராம் எடை மரிஜூவானா உள்பட மேலும் சில போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதையசுக்கு குலிவாலா கைது செய்யப்பட்டுள்ளார்

தாவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன்

வாழை படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவனான பொன்வேல், தளபதி விஜய்யின் தாவெக கட்சியில் இணைந்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜின் உறவினரான இவர் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சி கொடியை அணிவித்து நிர்வாகிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தீபாவளி ரிலீஸாக வந்த படங்கள் ஒவ்வொன்றும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அமரன் திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகும் நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் டிசம்பர் 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சூர்யா சாமி தரிசனம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோவை அருகே இருக்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்துள்ளார்.

கடந்த சில நாள்களாக கோயில் கோயிலாக சுற்றி சாமி தரிசனம் செய்து வரும் சூர்யா, தற்போது பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார்.

இசைவாணி விவகாரத்தில் கஸ்தூரி கருத்து

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து செய்தியாளார்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, "தற்போது இரண்டு படம் மற்றும் இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைப்பட்டதோடு மட்டுமல்லாமல் எனது மகனின் கல்வியும் தடைப்பட்டு உள்ளது. எனவே காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன்; திங்கட்கிழமை தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

மீண்டும் சர்ச்சையாக பேச விரும்பவில்லை. இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம்" என்று பேசியுள்ளார்.

சமந்தாவின் தந்தை மறைவு

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார். இதை தனது இன்ஸ்டாவில் தெரிவித்திருக்கும் நடிகை சமந்தா, தனது தந்தைக்கான இறப்பு குறித்த காரணத்தை தெரிவிக்கவில்லை.

பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்த அமரன் படக்குழுவினர்

அமரன் படம் மிக பெரிய வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் படக்குழுவினர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளார்கள்.

"மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இருக்கும் அமரன் குழுவினரின், இந்தச் சந்திப்பு தேசபக்தி உணர்வோடும், நம் தேசத்தின் மாவீரர்களுக்கான இதயப்பூர்வமான அஞ்சலியா செலுத்துவதையும் ஆழமாக எதிரொலிக்கிறது" என்று இந்த சந்திப்பின் புகைப்படங்களை பகிர்ந்து படத்தை தயாரித்திருக்கும் ராஜ்கமல் புரொடக்சன்ஸ் சார்பில் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசைவாணியின் பாடலை நக்கல் செய்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர் அறிக்கை

இசைவாணி பாடியிருக்கும் ஐ யாம் சாரி ஐயப்பா பாடலை விமர்சிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர், "இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு பாடினால் பூசை சிறப்பாக நடக்கும். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா?.! 'ஐயாம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்

தனது தந்தை சுரேஷ் மற்றும் தாயார் மேனகா ஆகியோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். அப்போது தனது திருமணம் குறித்த தகவல் உறுதி செய்த அவர், "நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடக்க உள்ளது. என்னுடைய திருமணம் கோவாவில் நடைபெறும்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.