கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலா சாருக்கு! நடிகர் அருண் விஜயின் உருக்கமான பதிவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலா சாருக்கு! நடிகர் அருண் விஜயின் உருக்கமான பதிவு!

கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலா சாருக்கு! நடிகர் அருண் விஜயின் உருக்கமான பதிவு!

Suguna Devi P HT Tamil
Nov 18, 2024 03:04 PM IST

வணங்கான் படத்தில் தன்னை நடிக்க வைத்ததற்காக இயக்குனர் பாலாவிற்கு அருண் விஜய் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலா சாருக்கு! நடிகர் அருண் விஜயின் உருக்கமான பதிவு!
கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலா சாருக்கு! நடிகர் அருண் விஜயின் உருக்கமான பதிவு! (Twitter)

இவரது படங்கள் அனைத்திலும் நடிக்கும் நடிகர்கள் நடிப்பின் உச்சத்திற்கு சென்று நடிப்பார்கள். மேலும் நடிகர்களாக இல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே மாறியும் நடிப்பார்கள். இந்த நிலையில் பிதாமகன் படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படமாக வணங்கான் படம் இருந்தது. இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு விலகியதாக அறிவித்து இருந்தார். நடிகர் சூர்யாவின் விலகலை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாக இருந்தார்.

வணங்கான்

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து தற்போது வெளியாக தயாரான நிலையில் உள்ளது இந்த சமயத்தில் நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் இப்படத்தின் பிரிவியூக் காட்சிகளை பார்த்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தினை நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் பாலா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் வணங்கான் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அருண் விஜய் அவரது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஏங்கி கொண்டு இருநந்ததாகவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தள பதிவு

இது குறித்த அவரது எக்ஸ் தளத்தில், 'மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை.

ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில்,

என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!

இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும்

திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்...

உங்கள் அருண் விஜய்" எனக குறிப்பிட்டுள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.