தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vetrimaaran On Vijay: அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல.. அண்ணாவையும் படிக்கணும்' - விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் பதில்!

Vetrimaaran on vijay: அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல.. அண்ணாவையும் படிக்கணும்' - விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் பதில்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 18, 2023 01:02 PM IST

சினிமாவில் நாம் பேசிய வசனம் சமூகத்தில் அதிக மதிப்பு கொண்ட ஒருவரை சென்றடையும் போது அதனுடைய நேர்மறையான தாக்கத்திற்கான எடுத்துக்காட்டாகத்தான் நான் விஜய் பேசிதை பார்க்கிறேன்.

Director vetrimaaran Speak about Thalapathy Vijay quotes Dhanush famous dialogue in vijay makkal iyakkam Thalapathy Vijay Education Award Ceremony 2023
Director vetrimaaran Speak about Thalapathy Vijay quotes Dhanush famous dialogue in vijay makkal iyakkam Thalapathy Vijay Education Award Ceremony 2023

ட்ரெண்டிங் செய்திகள்

நெகிழ்ந்த மாணவர்கள்!
நெகிழ்ந்த மாணவர்கள்!

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்வுதான் நேற்று தமிழ்நாடு முழுவதும் சென்சேஷன். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எங்கு பார்த்தாலும் விஜயும், விஜயின் ரியாக்‌ஷன்களுமே சர்வமையமாக இருக்கின்றன.

12 மணி நேரத்திற்கும் மேலாக நின்ற விஜய்!
12 மணி நேரத்திற்கும் மேலாக நின்ற விஜய்!

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விழாவில் அவ்வளவு நேரமும் மேடையிலேயே நின்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஜய் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அசுரன் படத்தின் கிளைமேக்சில் தனுஷ் பேசிய, “நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுக ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுக. ஆனா படிப்ப மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்ற வசனம் என்னை மிகவும் பாதித்து விட்டது. கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது.” என்று பேசினார்.

அசுரன் படப்பிடிப்பில் வெற்றிமாறன் தனுஷ்!
அசுரன் படப்பிடிப்பில் வெற்றிமாறன் தனுஷ்!

இந்த நிலையில் விஜய் பேசிய அந்த பேச்சு குறித்து அசுரன் பட இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ சினிமாவில் நாம் பேசிய வசனம் சமூகத்தில் அதிக மதிப்பு கொண்ட ஒருவரை சென்றடையும் போது அதனுடைய நேர்மறையான தாக்கத்திற்கான எடுத்துக்காட்டாகத்தான் நான் விஜய் பேசிதை பார்க்கிறேன். நாம் நம் வரலாறை தெரிந்து கொண்டேன். அவர் சொன்னது போல காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரை படிப்பது போல அண்ணாவை உள்ளிட்ட தலைவர்களையும் படிக்க வேண்டும் நான் நினைக்கிறேன்.” என்று பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்