தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  S.s.chakravarthy : தனக்கென்று ஒரு வரலாறு படைத்தவர்.. Ss சக்கரவர்த்தி மறைவு அதிர்ச்சி அளிக்கிறது - டி. ராஜேந்தர் இரங்கல்!

S.S.Chakravarthy : தனக்கென்று ஒரு வரலாறு படைத்தவர்.. SS சக்கரவர்த்தி மறைவு அதிர்ச்சி அளிக்கிறது - டி. ராஜேந்தர் இரங்கல்!

Divya Sekar HT Tamil
Apr 29, 2023 11:37 AM IST

தனக்கென்று ஒரு வரலாறு படைத்த நிக் ஆர்ட்ஸ் S.S.சக்ரவர்த்தி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என மனதிற்கு அதிர்ச்சி அளித்தது என டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

டி. ராஜேந்தர் இரங்கல்
டி. ராஜேந்தர் இரங்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் தயாரித்துள்ள திரைப்படங்களில் அஜித் நடித்த திரைப்படங்களே அதிகமாகும். அஜித்தின் வாலி, முகவரி, வில்லன், வரலாறு, விக்ரமின் காதல் சடுகுடு, சிம்புவின் காளை உட்பட பல படங்களைத் தயாரித்தவர் SS சக்கரவர்த்தி.

இவர் இன்று புற்றுநோயால் காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி மறைவுக்கு இயக்குனர் டி. ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”திரைப்பட நடிகர், நண்பர் அஜித் குமார் அவர்களை வைத்து எண்ணற்ற திரைப்படங்களையும் என் மகன் சிலம்பரசனை வைத்து காளை, வாலு போன்ற படங்களையும் மற்றும் தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து தனக்கென்று ஒரு வரலாறு படைத்த நிக் ஆர்ட்ஸ் S.S.சக்ரவர்த்தி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என மனதிற்கு அதிர்ச்சி அளித்தது.

அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்