தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  D50 Movie: தனுஷ் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்

D50 Movie: தனுஷ் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்

Aarthi HT Tamil
Jul 06, 2023 11:34 AM IST

நடிகர் தனுஷின் 50 ஆவது பட அப்டேட் வெளியாகி உள்ளது.

தனுஷ்
தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

பவர் பாண்டி படத்தையும் இயக்கினார். அதன் பிறகு தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். தற்போது மீண்டும் தனுஷ் இயக்கம் பக்கம் வந்து இருக்கிறார்.

நடிகர் தனுஷ் தனது கேரியரில் மதிப்புமிக்க 50 ஆவது படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தற்காலிகமாக இப்படம், 'டி50' என அழைக்கப்படுகிறது. ஆனால் 'ராயன்' என்ற தலைப்பு ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம். இந்தப் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷ் மொட்டையடித்த நிலையில் நடிக்க உள்ளார்.  அறிவிப்பு போஸ்டரில், தனுஷ் பின்னால் இருந்து, சட்டையின்றி கையில் கத்தியுடன் காட்சியளிக்கிறார்.

தனுஷின் அண்ணனாக எஸ்.ஜே.சூர்யாவும், தம்பியாக சந்தீப் கிஷனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சந்தீப் கிஷனும், தனுஷும் ஏற்கனவே ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் முடிந்துவிட்டன. 'கேப்டன் மில்லர்' லுக்கில் இருந்து தனுஷ் முழுவதுமாக வெளியே வந்துவிட்ட நிலையில், சந்தீப் கிஷனின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக 'கேப்டன் மில்லர்' இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

கேப்டன் மில்லர்' 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 'டி50 (ரியான்)' 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் வெளியாகும். 

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மே' என்ற படத்தையும்  தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். இந்த படம் 2024 ஆம் ஆனு வெளியாக உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்