தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Deepika Padukone: புராஜெக்ட் கே அப்டேட்.. ஹாலிவுட் ரேஞ்சில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Deepika Padukone: புராஜெக்ட் கே அப்டேட்.. ஹாலிவுட் ரேஞ்சில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Aarthi V HT Tamil
Jul 18, 2023 09:38 AM IST

ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் தீபிகா படுகோனின் தோற்றம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் தாமதமாக வெளியிடப்பட்டது. ஆனால் இந்த போஸ்டரில் தீபிகாவின் லுக் ஹாலிவுட் ரேஞ்சில் உள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக்களையும் தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

'புராஜெக்ட்-கே' படத்தின் தலைப்பு சர்வதேச அரங்கில் பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. ஜூலை 20 அன்று வெளியிடப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், இயக்குனர் நாக் அஸ்வின், தயாரிப்பாளர் அஷ்வினி தத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சமீபத்தில், பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் டீஸர் வெளியான நிலையில் தற்போது 'புராஜெக்ட்-கே' படத்தின் க்ளிம்ப்ஸ் வரப்போவதால் ரசிகர்கள் முழு உற்சாகத்தில் உள்ளனர்.

டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகி வரும் படம் என்பதால் தலைப்பு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்