தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cwc Venkatesh Bhat To Judge New Show In Sun Tv

CWC Venkatesh Bhat: குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் எடுத்த அதிரடி முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Feb 28, 2024 12:28 PM IST

குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் புதிய நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.

குக் வித் கோமாளி!
குக் வித் கோமாளி!

ட்ரெண்டிங் செய்திகள்

மையலில் கண்டிப்பாக இருக்கும் இவர்கள் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன.

கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனை நோக்கி நகர்கிறது. இந்த நிலையில் இந்த சீசனிலும் ஏற்கனவே நடுவர்களாக இருந்தவர்களே நடுவர்களாக இருப்பார்கள் என்ற தகவல் உலாவிக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அதனை வெங்கடேஷ் பட் மறுத்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் , “ கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன் 5 -ல் நான் நடுவராக தொடர்கிறேன் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்பின் வழியாக அதனை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

நான் அந்த நிகழ்ச்சியில் நடுவராக தொடரவில்லை. லட்சக்கணக்கான மக்களையும், என்னையும் மகிழ்ச்சிபடுத்திய அந்த அழகான நிகழ்ச்சியில் இருந்து நான் பிரேக் எடுக்க இருக்கிறேன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது. அது எனக்கு செளகரியமாகவும், நான் நானாக இருப்பதற்கும் வழிவகுத்தது.

கடந்த 24 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சேனலுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் என்னுடைய பிற வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறு கிறேன். இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் நான் இன்னொரு வித்தியாசமான கான்செப்ட்டில் உங்களை மகிழ்ச்சிப்படுத்த இன்னொரு மேடையில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இவரை தொடர்ந்து நடுவர் தாமுவும் இனி நிகழ்ச்சியில் தொடர போவது இல்லை என கூறினார். 

இந்நிலையில் சன் டிவியில் புதிதாக வரவிருக்கிற ரியாலிட்டி ஷோ ஒன்றில் இவர்கள் இருவரும் நடுவர்களாக வர இருக்கிறார்கள் என ஒருபுறம் சமூக வலைதள பக்கங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்