தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: 5 மணி நேரம்.. குக் வித் கோமாளி இறுதிப் போட்டி பார்க்க தயாரா?

Cook With Comali: 5 மணி நேரம்.. குக் வித் கோமாளி இறுதிப் போட்டி பார்க்க தயாரா?

Aarthi V HT Tamil
Jul 27, 2023 11:53 AM IST

குக் வித் கோமாளி வரும் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஸ்டார் விஜய்யில் மட்டும் ஒளிபரப்பாகும்.

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் நான்காவது சீசனின் இறுதிக்கட்டத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. நான்கு ஆண்டுகளாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு தனித்துவமான கருத்தாக உள்ளது. போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி பார்வையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

குக் வித் கோமாலி சீசன் 4 இந்த ஆண்டின் தொடக்கத்தில் பத்து பிரபல நட்சத்திரங்களுடன் தொடங்கப்பட்டது. அவர்கள் பத்து வேடிக்கையான அன்பான கோமாலிகளுடன் ஜோடியாக இந்த சமையல் போட்டியில் கலந்து கொண்டு வந்தனர். 

பல கடினமான சுற்றுகளுக்கு பிறகு ஆறு பேர் இந்த இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சின் டைனமிக் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் இடம் பெற்று வருகிறார்கள் நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். சமீப காலமாக நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த மணிமேகலையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

வரும் ஞாயிறு இடம்பெறும் இறுதிப்போட்டியில் ஆறு போட்டியாளர்கள் தங்கள் கோமாளி துணையுடன் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். 

அவர்கள் ஸ்ரீஸ்டி, மைம் கோபி, ஷிவாங்கி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியன். கோமாளிகள் புகழ், மோனிஷா, குரேஷி, சுனிதா, ஜி.பி.முத்து, சில்மிஷம் சிவா ஆவார்.

கிராண்ட் ஃபைனலில் பார்வையாளர்கள் வேடிக்கையான மற்றும் உல்லாசமான தருணங்களுடன் போட்டியாளர்களிடையே மிகவும் ஆடம்பரமான போட்டியை எதிர்பார்க்கலாம். வரும் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஸ்டார் விஜய்யில் மட்டும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாள் சீசன் 4 இன் கிராண்ட் ஃபைனலைப் பார்க்கத் தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்