தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadivel Balaji : மறக்க முடியுமா இவரை.. மக்களை தன் நகைச்சுவையால் கட்டிப்போட்டவர்.. வடிவேல் பாலாஜி நினைவு நாள் இன்று!

Vadivel Balaji : மறக்க முடியுமா இவரை.. மக்களை தன் நகைச்சுவையால் கட்டிப்போட்டவர்.. வடிவேல் பாலாஜி நினைவு நாள் இன்று!

Divya Sekar HT Tamil
Sep 10, 2023 05:45 AM IST

அது இது எது நிகழ்ச்சியில் வடிவேலு போல நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் வடிவேல் பாலாஜியின் நினைவு நாள் இன்று.

நடிகர் வடிவேல் பாலாஜி
நடிகர் வடிவேல் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

1991-ஆம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் அவருக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை. இறுதியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

குறிப்பாக இவர் பெண் வேடம் அணிந்து செய்யும் காமெடிக் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரின் டைம்மிங் காமெடி அட்டகாசமாக இருக்கும். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகளான அது இது எது, கலக்கப் போவது யாரு, கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

வடிவேலு போன்ற கெட்டப்பில் அவர் செய்யும் காமெடியும் அதற்கு ஏற்றார் போல ரியாக்‌ஷன்கள் நம்மை வயிறுக் குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடர்ந்து சில படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, யாருடா மகேஷ், பந்தயம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையாளராக பல விருதுகளை வென்றுள்ளார்.

இவர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய கை, கால்களும் செயல் இழந்தது. இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால் அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 42. அவருக்கு 1 மகனும், மகளும் இருக்கிறார்கள். இன்று அவரின் நினைவுநாள். இன்றைய தினம் அவரை நினைவுகூறுவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்