தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chandramukhi 2 First Look: வேட்டைய ராஜாவாக மாறிய ராகவா லாரன்ஸ் - சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக்

Chandramukhi 2 First Look: வேட்டைய ராஜாவாக மாறிய ராகவா லாரன்ஸ் - சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக்

Aarthi V HT Tamil
Jul 31, 2023 10:53 AM IST

சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு பதிலாக கதையின் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வடிவேலு காமெடியனாகவும், ராதிகா முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா கிருஷ்ணன், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை லைக்கா புரொடக்‌ஷன் தயாரிக்க, முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இந்த பாகத்தையும் இயக்குகிறார். கடந்த ஆண்டில் மைசூருவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதைதத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் ராகவா லாரன்ஸ், வேட்டைய ராஜா கெட்டப்பில் நிற்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் லாரன்ஸ் தலை ஒட்டி வைத்து இருப்பது போல் இருக்கிறது. வேட்டைய ராஜா மாதிரி இல்லை என கிண்டல் செய்து வருகின்றனர்.

சந்திரமுக 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையாக செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

படத்தின் பின்னணி இசை மற்றும் இசையை எம்.எம்.கீரவாணி அமைத்துள்ளார். சந்திருகி 2 படத்தின் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவை ஆண்டனி மற்றும் ஆர்.டி.ராஜசேகர் கவனித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹாரர் மற்றும் ஆக்சன் ஜானர் என்டர்டெய்னராக உள்ள இந்த படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்