தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil: 40 நாள் மேல் காதல் செய்த ஐஷூ வாங்கிய சம்பளம் என்ன?

Bigg Boss Tamil: 40 நாள் மேல் காதல் செய்த ஐஷூ வாங்கிய சம்பளம் என்ன?

Aarthi V HT Tamil
Nov 13, 2023 10:18 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஷூ வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ஐஷூ
ஐஷூ

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்று வார இறுதி என்பதால் பிக் பாஸ் தமிழ் 7 இல் ஐஷூ வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஏனெனில் அவர் பார்வையாளர்களிடமிருந்து குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஐஷூ பிக் பாஸ் இல்லத்தில் மொத்தம் 42 நாட்கள் இருந்துள்ளார். ஆகையால், இவருக்கு ஜி.எஸ்.டி போக, சுமார் 8 லட்ச ரூபாய் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. நடன கலைஞராக இருக்கும் ஐஷூ, பிக் பாஸ் போட்டிக்குள் நுழைந்த இளம் போட்டியாளர்களுள் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது .

பிக் பாஸ் 7 ஆவது சீசன் வீட்டில் இருந்து முதல் நபராக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பட்டார். அவர் வெளியேறிய இரண்டாம் நாளே எழுத்தாளர், பவா செல்லதுரை தனது உடல் நிலையை காரணம் காண்பித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சென்றார். 

அவரை தொடர்ந்து மூன்றாவது நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேறினார். 4 ஆவது நபராக அடுத்தடுத்து யுகேந்திரன், வினுஷா, அன்னா பாரதி ஆகியோர் வெளியேறப்பட்டனர். இதில் பிரதீப் கடந்த வாரத்திற்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லி திடீரென ரெட் கார்டு கொடுத்து அனுப்பட்டார். இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். 

மேலும் பிரதீப்பை வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே அழைத்து வர வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல் கமல் ஹாசன் தான் வெளியே அனுப்பினார் என சாடினார். பின்னர் சனிக்கிழமை கமல் ஹாசன் தனக்கு இதில் எந்த விதமான சமந்தமும் இல்லை என தெளிவுப்பிடுத்தினார். 

வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் தமிழ் 7 இல் விஜே அர்ச்சனா, கானா பாலா, அன்ன பாரதி, ஆர்ஜே பிராவோ மற்றும் தினேஷ் கோபால்சாமி ஆகியோர் நுழைந்தனர். அவர்களின் வருகை போட்டியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மற்றும் போட்டியாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக்கியது. இதில் குறைவான வாக்குகள் பெற்றார் என்ற அடிப்படையில் அன்னா பாரதி எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பட்டார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்