Bigg Boss Aishu Father: பேச்சை கேட்காமல் சென்ற ஐஷு.. வாழ்க்கையே மாறிடுச்சு.. புலம்பி தள்ளும் ஐஷுவின் தந்தை-bigg boss aishu father latest interview about her daughter - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Aishu Father: பேச்சை கேட்காமல் சென்ற ஐஷு.. வாழ்க்கையே மாறிடுச்சு.. புலம்பி தள்ளும் ஐஷுவின் தந்தை

Bigg Boss Aishu Father: பேச்சை கேட்காமல் சென்ற ஐஷு.. வாழ்க்கையே மாறிடுச்சு.. புலம்பி தள்ளும் ஐஷுவின் தந்தை

Aarthi Balaji HT Tamil
Feb 14, 2024 09:53 AM IST

ஐஷுவின் தந்தை சமீபத்தில் தன் மகள் தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார்.

ஐஷு
ஐஷு

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்ற ஐஷுவும், நிக்சனும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தனர். அப்போது, நிக்சன் சோர்வாக அறையின் மற்றொரு பகுதியில் இருந்தார். இடையில் கண்ணாடி இருந்தது. அருகில் வந்த ஐஷு அவருக்கு முத்தம் கொடுப்பதுபோல், முக பாவனை செய்தார். இது தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாகப் பார்க்கப்பட்டது. 

இதன் காரணமாக சர்ச்சை வெடித்தது. இதனால் கொதிப்படைந்த ஐஷுவின் பெற்றோர், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ நடக்கும் பகுதிக்கு சென்று குடும்ப மானம் போவதாக அழுதனர். இதனால், அடுத்த வாரமே ஐஷு ஏதோ சில காரணங்களுக்காக எவிக்ட் செய்யப்பட்டார். 

ஐஷுவின் பெற்றோர் பிக் பாஸ் வீடு இருக்கும் சென்னை- பூந்தமல்லி இவிபி செட்டுக்கே சென்று, தங்கள் மகளை எலிமினேட் செய்து வெளியில் அனுப்புங்கள் என்று கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐஷுவின் தந்தை சமீபத்தில், IndiaGlitz Tamil யூடியூப் சேனலில் மகள் தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார்.

அதில், “ பிக் பாஸ் பற்றி எந்த ஒரு முன் ஏற்பாடும் இல்லாமல் தான் இருந்தது. செப்டம்பர் 10 ஆம் தேதி தான் தெரியும். ஐஷுக்கும் அப்போது தான் தெரியும். ஐஷுவை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். 20 முறை சென்னை வந்தேன். நிகழ்ச்சி தொடர்பாக எவ்வளவு என்னால் சொல்ல முடியுமோ சொன்னேன்.

ஐஷு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்தேன். இந்த இடம் வேண்டாம் என எவ்வளவோ சொன்னேன். ஒரு கட்டத்தில் ஐஷு பிடிவாதமாக இருந்த காரணத்தினால் தவிர்க்க முடியாமல் அனுமதி கொடுத்தேன்.

என் குடும்பத்தில் அனைவரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள். இத்தனை வருடங்களாக எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனத்தையும் எதிர்கொண்டது இல்லை. ஆனால் ஐஷு பிக் பாஸ் போனதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கையே மொத்தமாக மாறியது. முழுக்க நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இருக்கும்.

வெளியே வந்து ஐஷு போட்ட மனிப்பு கடிதம் பற்றி எனக்கு தெரியாது. அவராக தான் அதை எழுதினார். 20 நிமிடம் முன்பாக தான் என்னிடம் காட்டினார். முழு மனதாக தான் அவர் அந்த கடிதம் எழுதினார். ஒரு குறிப்பிட்ட காலம் அந்த கடிதம் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்தது. அதற்கு பிறகு அவரே அதை எடுத்துவிட்டார்.

ஒரு போட்டியாளரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சிக்க வேண்டும். அவர்களுடைய குடும்பத்தையும் சேர்த்து விமர்சிப்பது ரொம்பவே தவறானது. எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல் இருக்கிறது. என் குடும்பம் முழுக்க மன உளைச்சலில் இருந்தது.

என்ன நடந்தாலும் ஐஷு என் மகள், அவளுடைய கனவை நிறைவேற்றுவதற்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டாலும், அந்த அறையில் இருக்கும் ஜன்னலயாவது திறந்து வைப்பேன் “ என்றார்.

நன்றி: IndiaGlitz Tamil

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.