தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: என்ன இப்படி ஆகிடுச்சு..இந்த வாரம் வெளியேறுவது இவரா?

Bigg Boss 7 Tamil: என்ன இப்படி ஆகிடுச்சு..இந்த வாரம் வெளியேறுவது இவரா?

Aarthi V HT Tamil
Dec 16, 2023 01:11 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள் என பார்ப்போம்.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து மிக்ஜாம் புயல் காரணமாக பொது மக்கள் மின்சாரம் இல்லாமலும், தொலைத் தொடர்பு இல்லாமலும் தவித்து வரும் நிலையில் அவர்களால் வாக்களிக்க முடியாததை கருத்தில் கொண்டு கடந்த வாரம் எலிமினேஷனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வாரம் விஷ்ணு, விஜே அர்ச்சனா, நிக்சன், கூல் சுரேஷ், தினேஷ் மற்றும் அனன்யா ராவ் உட்பட ஆறு போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் வார நடுவே அனன்யா வெளியே அனுப்பட்டார்.

விஷ்ணு மற்றும் கூல் சுரேஷ் குறைவான வாக்குகள் பெற்று உள்ளார். இரண்டு பேரும் ஸ்டார்ங் போட்டியாளர்கள் என்பதால் யார் இதில் இருந்து வெளியே செல்வார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். 

இந்நிலையில் பிக் பாஸ் 7 ஆவது சீசனில் இருந்து இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்றார் என்ற அடிப்படையில் கூல் சுரேஷ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பட்டு உள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த வாரம் கூல் சுரேஷ் தனக்கு பிக் பாஸ் வீட்டில் விளையாட விருப்பம் இல்லை என சொல்லி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பினார். மேலும் சுவர் ஏறி வெளியே குதித்து செல்லவும் முயற்ச்சி செய்தார். பிறகு அவரை பிக் பாஸ் அழைத்து ஆலோசனை கூறி விளையாட்டை தொடர வைத்தார். 

இதன் காரணமாக அவரை எலிமினேட் செய்து பிக் பாஸ் அனுப்புகிறார் என சொல்லப்படுகிறது. ஒரு சிலரோ நிக்சனை காப்பாற்றவே வேண்டும் என்று கூல் சுரேஷை வெளியே அனுப்பி இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்