தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மீண்டும் பக்கா பிளான் போடும் மாயா டீம்!

Bigg Boss 7 Tamil: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மீண்டும் பக்கா பிளான் போடும் மாயா டீம்!

Aarthi V HT Tamil
Nov 07, 2023 11:40 AM IST

எதற்கு எடுத்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா மற்றும் கூட்டாளிகள் பேசி வருகிறார்கள்.

மாயா
மாயா

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் ஸ்மான் பாஸ் வீட்டிற்கும், பிக் பாஸ் வீட்டிற்கும் பெரிய கலவரம் நடந்தது. அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் பிக் பாஸ் வீட்டார் செய்யும் சில செயல்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த வாரம் பீரதிப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிகப்பு கொடி காண்பித்து மாயா உள்ளிட்ட அவரின் கூட்டாளிகள் ரெட் கார்டு கொடுத்து அனுப்பினர்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் வேண்டும் என்றே கார்னர் செய்து பிரதீப்பை அனுப்பியதாக அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால் இரண்டு அணிகள் இடையே கடும் சண்டை வெடித்து வருகிறது.

இந்நிலையில் எதற்கு எடுத்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா மற்றும் கூட்டாளிகள் பேசி வருகிறார்கள். இது தொடர்பாக நேற்றைய எபிசோட்டில், பூர்ணிமா, என்னுடைய பாதுகாப்புக்கு பிரச்னை இருப்பதாக நான் உணர்க்கிறேன். அதனால் என்னை கன்பெஷன் அறைக்கு கூப்பிடுங்க என்றார்.

உடனே மாயா, ” கேப்டானக இங்கு இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு பிரச்னை இருக்கும் என நினைக்கிறேன். அதுநாளா யாருக்கும் எல்லாம் பாதுகாப்பு இல்லையோ கன்பெஷன் அறைக்கு கூப்பிடுங்க” என சொல்லி ஐஷூ, அக்‌ஷயா, ஜோவிகாவை கூட்டு சேர்த்து பேசி வருகிறார்.

 

இதை பார்த்த ரசிகர்கள், “பாதுகாப்பு இல்லையா..

60 கேமராக்கள் மூலம் பல பேர் பார்க்கிறார்கள். பிக் பாஸ் டீம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இது மேல எண்ணம் வேண்டும்” என கலாய்த்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்