தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigboss Season 7 Tamil: ‘நீட் வரைக்கும் போயிட்டா; ஜோவிகாவிற்கு மெச்சுரிட்டியே இல்ல’- மீண்டும் திரியை பற்ற வைக்கும் விசி!

Bigboss season 7 Tamil: ‘நீட் வரைக்கும் போயிட்டா; ஜோவிகாவிற்கு மெச்சுரிட்டியே இல்ல’- மீண்டும் திரியை பற்ற வைக்கும் விசி!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 07, 2023 10:56 AM IST

நேற்றைய பிக்பாஸ் சீசன் 7 - ன் எபிசோடில் விசித்ராவுக்கும் ஜோவிகாவிற்கும் இடையே நடந்த மோதல்தான் பிக்பாஸின் இன்றைய டாப்பிக்காக மாறியிருக்கிறது

நொந்து கொண்ட விசித்ரா
நொந்து கொண்ட விசித்ரா

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் ஜோவிகாவின் கல்வியைப் பற்றி பேசிய பிரச்சினையும் வந்தது. அப்போது பேசிய விசித்ரா, ஜோவிகாவின் கல்வியில் நான் எந்தக்கருத்தையும் சொல்லவில்லை. அடிப்படையாக குறிப்பிட்ட அளவு கல்வியானது, அவசியம் என்றுதான் சொன்னேன். 

கல்வி அனைவருக்கும் முக்கியம் என்று மட்டும்தான் சொன்னேன். இதனையடுத்து பேசிய ஜோவிகா, ஆம், அறிவும், கல்வியும் முக்கியம்தான், நான் இல்லை என்று சொல்லவில்லை. இன்று நமது நாட்டில் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு சென்று, எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

அதே போல படிக்க முடியாமலும் சாகிறார்கள். அதை சொல்லும் விதமாகத்தான் நான் இங்கு வந்தேன். எல்லாரும் டாக்டர் ஆனால் யார் கம்பவுண்டர் வேலை செய்வது? 

உங்களை இங்குள்ளவர்கள் அம்மா என்று கூப்பிட்டு இருக்கலாம். ஆனால், உங்களை நான் விச்சு என்றுதான் கூப்பிட்டேன். இங்கு எல்லாரிடமும் நான் பணிவாக நடந்து கொள்கிறேன். ஆமாம், எனக்கு கப் ஜெயிக்க வேண்டும்தான். அதற்காகத்தான் இங்கு நான் வந்தேன்.

அதற்காக நான் போட்டியாளர், அதனால் நான் எப்படி வேண்டுமென்றாலும் நடந்து கொள்ளலாம் என்று அர்த்தம் இல்லை. என்னுடைய குடும்பத்தை பற்றி நீ பேசாதே.. இங்கு என்னுடைய அம்மாவோ, தாத்தாவோ.. இங்கு வரவில்லை. 

ஆகையால் என்னை பற்றி மட்டும் பேசுவதாக இருந்தால் பேசு.. என்னுடைய குடும்பத்தை பற்றி பேசாதே" என்று சாடினார். இதில் மனம் நொந்து போன விசித்ரா என்னுடைய கணவன் என்னை நான் ஒரு கேன என்று அடிக்கடி சொல்வார். அவர் சொல்லியது உண்மைதான் என்று கண்ணீர் வடித்தார்.

இந்த நிலையில், விசித்ரா அந்த சம்பவம் பற்றி இன்றும் பேசியிருக்கிறார். அவர் பேசும் போது, “ இது வெளியே ஒரு தவறான செய்தியாக சென்று விட வாய்ப்பு இருக்கிறது. எங்கெங்கேயோ சென்று, கடைசியில் நீட்டுக்கே சென்று விட்டாள். அங்கு வரை போவதற்கான அவசியமே கிடையாது. 

இது அவளின் மெச்சுரிட்டி இல்லாத குணத்தை காட்டுகிறது. இதனைகேட்ட பிரதீப், நான் அதனையெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் இப்போது என்னுடைய டார்கெட் அவள் கிடையாது என்றார். 

இதனிடையே அங்கு வந்த யுகேந்திரன், இந்த விஷயத்தில் அவளுக்கு மெச்சுரிட்டி இல்லை என்று சொல்ல முடியாது. காரணம், இப்போதுள்ள குழந்தைகள் வளரும் போதே எல்லாம் தெரிந்துதான் வளர்கிறார்கள் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய விசித்ரா, அவள் அவளின் கேமை விளையாட நன்றாக கற்றுக்கொண்டாள் என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்