தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ayalaan Release Date: இந்த தீபாவளி எங்களுடையது.. பண்டிகையை குறிவைத்த சிவகார்த்திகேயன்

Ayalaan Release Date: இந்த தீபாவளி எங்களுடையது.. பண்டிகையை குறிவைத்த சிவகார்த்திகேயன்

Aarthi V HT Tamil
Apr 24, 2023 11:52 AM IST

அயலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து சிவகார்த்திகேயன்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் புதிய படத்திற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் அயலான் படம் குறித்து எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது. இப்படம் ஆரம்பமாகி கிட்டதட்ட ஆறு ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் இருந்ததால் படம் கைவிடப்பட்டது என நினைத்தனர். ஆனால் திடீரென பட அப்டேட் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 'அயலான்' படம் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்து இருக்கிறார். ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் படம் தயாராகி உள்ளது.

முன்னதாக ‘வேற லெவல்’ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் யோகி பாபு, கருணாகரன், இஷா கொப்பிகர், ஷரத் கேல்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

எளியனுடன், சிவகார்த்திகேயன் பறக்கும் போஸ்டருடன் அயலான் திரைப்பட அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கும் ‘அயலான்’ படம் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பு எழுந்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்