Atlee, Priya Love: டைரக்டரே.. நண்பன், கணவனமாக மாறியது எப்படி.. அட்லி, ப்ரியாவின் காதல் கதை தெரியுமா?
Atlee, Priya: தனது பெற்றோர் மாப்பிள்ளை தேடுவதாக பிரியா அவரிடம் கூறினார். அப்போது அட்லி, "ஏன் என் ஜாதகத்தை அவர்களிடம் காட்டக் கூடாது" என்று கேலியாக சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான அட்லி, இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக நிற்கிறார்.
ராஜா ராணி, தெறி மற்றும் மெர்சல் போன்ற வெற்றிகரமான படங்களின் அவரது சாதனை தொடர்ந்தது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரது மனைவி பிரியா அட்லி பற்றி பார்ப்போம்.
அட்லியின் மனைவியும், பிரபல நடிகையுமான பிரியா, திரைப்படத் துறையில் ஒரு ஈர்க்கக்கூடிய வாழ்க்கையில் இருந்தார். அவர், நான் மகான் அல்லா, ரெட் சில்லிஸ், யுவ ரத்னா மற்றும் சைக்கோ வர்மா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த வளர்ந்து வரும் பிரபலங்கள் இருவரும் பொழுதுபோக்கு துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பரஸ்பர விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர்.
ராஜா ராணி ஹிட் மூலம் அட்லி கோலிவுட்டில் ஒரு இடத்தைப் பிடித்தார். பிரியா உள்ளிட்ட நண்பர்களை அட்லி அவ்வப்போது சந்திப்பது வழக்கம். ஒருமுறை அப்படியொரு சந்திப்பில், தனது பெற்றோர் மாப்பிள்ளை தேடுவதாக பிரியா அவரிடம் கூறினார். அப்போது அட்லி, "ஏன் என் ஜாதகத்தை அவர்களிடம் காட்டக்கூடாது" என்று கேலியாக சொல்ல, அனைவரும் சிரித்தனர். ஆனால் அவரது பேச்சால் ப்ரியா மிகவும் நெகிழ்ந்து போனார்.
வீட்டிற்கு சென்ற உடனேயே, அட்லிக்கு போன் செய்து, 'ஏன் அப்படி சொன்னார்' என கேட்டு உள்ளார். அதற்கு பதிலளித்த அட்லி, “எனக்கு தோன்றியதை தான் கூறினேன். நீங்கள் ஆர்வமாக இருந்தால், நான் வந்து உங்கள் குடும்பத்தினருடன் பேசுவேன். ப்ரியா, பின்னர் தனது பெற்றோருடன் கலந்துரையாடினார்.
இரு வீட்டாரும் இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டனர், நவம்பர் 9, 2014 அன்று, அட்லி மற்றும் பிரியா திருமணம் செய்து கொண்டனர். அழகான தம்பதிகளான அட்லி மற்றும் ப்ரியா ஜனவரி 31, 2023 அன்று திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தையை வரவேற்றார்கள்.
முன்னதாக தன் திருமணம் தொடர்பாக அட்லி பேசும் போது, “ நான் சிவாவை பார்க்க வரும் போதுதான் ப்ரியாவை முதன்முறையாக பார்த்தேன். எனக்கு பார்த்த உடனேயே பிடித்து விட்டது. இந்த விஷயம் நடந்தது எனக்கு திருமணமாவதற்கு 8 வருடங்கள் முன்னர். அப்போதுதான் கனாகாணும் காலங்கள் சீரியல் சென்று கொண்டிருந்தது.
அப்படி ஒரு முக அறிமுகம்தான் எனக்கும் அவருக்கும். அதனைத்தொடர்ந்து எந்திரனுக்காக ஒரு டெஸ்ட் ஷூட்டிற்காக நான் அவரை சந்தித்தேன். அவர்களுடைய அம்மா எனக்கு மிகவும் நெருக்கம். ஆனால் அதனை அவரிடம் நான் சொல்லக்கூடிய இடத்தில் அப்போது இல்லை. அப்போது முதலில் நாம் யார் என்பதை முடிவு செய்வோம். அதன் பின்னர்தான் அதனை பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் 8 வருடங்களாக அதனை பற்றி யோசிக்காமல் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன்.
எனக்குள் காதல் இருப்பது ப்ரியாவிற்கு தெரியாது. அவள் என்னை ஒரு நல்ல நண்பராக மட்டும்தான் நினைத்துக்கொண்டிருந்தார். அவர் என்னைக்கூப்பிடுவது டைரக்டரே.. என்றுதான் கூப்பிடுவார். என்னுடைய அம்மாவிற்கு பிறகு என்னை டைரக்டர் என்று கூப்பிட்டது அவர்தான்.
அதன் பின்னர் ராஜா ராணி திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் எல்லாம் சரியாக நடப்பது போன்று தெரிந்தது. ஒரு நாள் நண்பர்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று கூறினார்.
அப்போது நான், அப்படியானல் நான் வேண்டுமென்றால் ஜாதகம் கொடுக்கவா? என்று கேட்டேன். அதற்கு அவர் காமெடி செய்யாதீர்கள் டைரக்டரே என்று சொன்னார். அவர் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ள வில்லை என்று தெரிந்ததும், அவரது அம்மாவை சென்று சந்தித்து விஷயத்தை சொன்னேன். அவர் அம்மா ஜாதகம் கொடுங்கள் என்றார். ஜாதகம் பார்த்த ஜோசியர் நன்றாக சொல்லி விட, நானும் ப்ரியாவும் பேசினோம். அடுத்த 1 ½ மாதத்தில் திருமணம் நடந்தது” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்