தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ar Rahman Travelled In Kochi Metro Rail Becomes Viral

AR Rahman: கொச்சி மெட்ரோவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜாலி பயணம்! ரசிகர்களுடன் செஃல்பி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 01, 2024 02:59 PM IST

கேரளா மாநிலும் கொச்சி நகரின் மெட்ரோ ரயிலில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பயணித்த விடியோ வைரலாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவருடன் ஆர்வமாக செஃல்பி எடுத்துக்கொண்டனர்.

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

ட்ரெண்டிங் செய்திகள்

மலையாள சினிமாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் மார்ச் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது. மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது. ஆடுஜீவதம் படத்தின் டீசர், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏ.ஆர். ரஹ்மான் கொச்சி சென்றார். அப்போது அவர் கொச்சி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். ரயிலில் ஏ.ஆர். ரஹ்மான் பயணிப்பதை அறிந்த சக பயணிகள் பலரும் அவருடன் செஃல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

ஏ.ஆர். ரஹ்மான் மெட்ரோவில் பயணிக்க வந்ததை விடியோவாக கொச்சி மெட்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆடுஜீவிதம் கதை

கேரளாவை சேர்ந்த இளைஞன் வேலைக்காக அரபு நாடு செல்ல, அங்கு மாடு மேய்க்க வைக்கப்படுகிறார். முதலாளி அவரை அடிமைபோல் நடத்துகிறார். லைவனத்தில் மாட்டிக்கொள்ளும் அந்த இளைஞன் அங்கிருந்து தப்பிப்பது தான் படத்தின் கதை. பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

மலையாள சினிமாவில் நீண்ட காலம் தயாரான ஆடுஜீவிதம்

மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிளெசி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அமலாபால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக உடல் எடையை குறைத்து மிகவும் சிரமத்துடன் நடித்துள்ளார் பிருத்விராஜ்.

கடந்த 2008ஆம் ஆண்டிலேயே படத்தை உருவாக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் பிளெசி. ஆனால் 10 ஆண்டுகள் கழித்து 2018இல் தான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படத்தின் பெரும் பகுதி காட்சிகள் ஜோர்டன் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2022இல் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதன் மூலம் மலையாள சினிமாவில் நீண்ட காலம் தயாரான படமாக ஆடுஜீவிதம் உள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்