தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amazon: சைடு கேப்பில் சிந்து பாடும் அமேசான் - உங்க பணம் பத்திரம் மக்களே.. என்ன கதை தெரியுமா?

Amazon: சைடு கேப்பில் சிந்து பாடும் அமேசான் - உங்க பணம் பத்திரம் மக்களே.. என்ன கதை தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 25, 2023 11:44 AM IST

அமெரிக்காவின் ஃபெடரல் ட்ரேடு கமிஷன் பிரபல நிறுவனமான அமேசான் மீது குற்றசாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறது.

Amazon manipulated customers into buying Prime subscriptions says US Trade Commission
Amazon manipulated customers into buying Prime subscriptions says US Trade Commission (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

‘டார்க் பேட்டர்ன்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த வடிவமைப்பைக்கொண்டு வாடிக்கையாளர்களின் சந்தாக்களை அவர்களின் அனுமதியின்றி முறைகேடாக அமேசான் நிறுவனம் புதுப்பிப்பதாக குற்ற சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் இது போன்ற விதிமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுக்க வேண்டும் என்றும் ஃபெடரல் ட்ரேடு கமிஷன் கோரிக்கை வைத்தது.

இதற்கு பதிலளித்த அமேசான் நிறுவனம் ‘உண்மை என்னவென்றால் வாடிக்கையாளர்கள் பிரைமை விரும்புகிறார்கள். தங்கள் பிரைம் மெம்பர்ஷிப்பை பதிவு செய்தல் மற்றும் ரத்து செய்தல் ஆகியவற்றை தெளிவாகவும் எளிமையாகவும் அமேசான் வடிவமைத்து இருக்கிறது. ஃபெடரல் ட்ரேடு கமிஷன் இந்த வழக்கை தொடுப்பதற்கு முன்னதாக இது குறித்தான எந்தவொரு நோட்டீஸையும் எங்களுக்கு அனுப்பவில்லை.” என்று கூறியது.

ஃபெடரல் ட்ரேடு கமிஷன் தொடுத்த வழக்கில், ஃபெடரல் ட்ரேடு கமிஷன் கொடுத்த கணிசமான அழுத்தத்தின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அமேசான் தங்களுடைய சந்தாவை ரத்து செய்யும் முறையை மாற்றியது என்றும் ஆனால் விதிமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டு இருக்கிறது.

இது மட்டுமன்றி அமேசான் மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்ய மொபைலில் 6 கிளிக்குகளும், டெஸ்க்டாப்பில் 5 கிளிக்குகளும் தேவைப்படுகிறது என்றும் இந்த ரகசிய புராஜெக்ட்டிற்கு ‘இலியட்’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் மனுவில் சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் கமிஷன் ஆவணங்களை சமர்பிக்கச் சொன்ன போது விசாரணையை தாமதப்படுத்துவதற்கான வேலைகளை செய்தது என்றும் குறிப்பிட்டு இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்