தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: ஒரே போட்டோ..ஸ்தம்பித்த இன்ஸ்டா; விஜய் படைத்த புதிய சாதனை!

Vijay: ஒரே போட்டோ..ஸ்தம்பித்த இன்ஸ்டா; விஜய் படைத்த புதிய சாதனை!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 03, 2023 01:44 PM IST

இன்ஸ்டாவில் நேர்ந்த சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற இந்திய பிரபலமாக விஜய் மாறியிருக்கிறார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்; இதில் 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் விக்ரமும், கமலும் கூட இந்த படத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி அண்மையில் முடிந்தது. காஷ்மீரில் பட்ட கஷ்டங்களை தொகுத்து வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.

அந்த வீடியோ காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பை நல்ல படியாக முடிக்க உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கும், பாதுகாப்பிற்காக துணை நின்ற ராணுவத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக, லியோ படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்த இயக்குநர் மிஷ்கின் அறிக்கை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.தொடர்ந்து படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காஷ்மீர் படப்பிடிப்பில் எடுத்த வீடியோவை வெளியிட்டு லியோ படப்பிடிப்பில் உயர்தர Red V RAPTOR XL கேமரா பயன்படுத்தபடுவதாக தெரிவித்து இருந்தார்.

அடுத்தடுத்த அப்டேட்டுகளால் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சஞ்சய் தத் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த எக்ஸ்க்ளூசிவான வீடியோவை படக்குழு பகிர்ந்து இருந்தது.

அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் விழாவும் பார்ட்டி வைத்து கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்