தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adipurush Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஆதிபுருஷ் - 4 நாளில் எவ்வளவு வசூல் பாருங்க

Adipurush Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஆதிபுருஷ் - 4 நாளில் எவ்வளவு வசூல் பாருங்க

Aarthi V HT Tamil
Jun 20, 2023 11:16 AM IST

ஆதிபுருஷ் படத்தின் 4 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆதிபுருஷ்
ஆதிபுருஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் ஆதிபுருஷ் படம், வெளியான முதல் வார இறுதியில் ரூ. 340 கோடி வசூல் செய்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்து உள்ளனர். 

வெளியான நாளில் இருந்து இன்று வரை வசூல் செய்த வசூல் விவரத்தைப் பொறுத்தவரை, அதாவது வெளியான மூன்று நாட்களில் முதல் நாள் (வெள்ளிக்கிழமை) - ரூ.140 கோடி, இரண்டாம் நாள் (சனிக்கிழமை) - ரூ. 100 கோடிகள், நாள் 3 (ஞாயிற்றுக்கிழமை) - ரூ.100 கோடி வசூல் செய்து உள்ளது.

ஆதிபுருஷ், பட பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளும் நிலையில், மறுபுறம் விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன. ராமாயணத்தை கேலி செய்துள்ளதாகவும், படத்தில் வரும் டயலாக்குகளுக்கும் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு வரும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் ட்ரோல்களைப் பார்த்து பலர் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து உள்ளனர்.

வெடித்த போராட்டங்கள்

அயோத்தியில் உள்ள பார்வையாளர்கள் படத்தின் வசனங்கள் தங்களுக்கு ரத்தக் கொதிப்பை உண்டாக்குவதாகக் கூறி படத்தை உடனடியாகத் தடை செய்யக் கோரி, வாரணாசியில் ஒரு குழுவினர் போராட்டம் நடித்தி, படத்தின் போஸ்டர்களைக் கிழித்துள்ளனர். கோயில் நகரமான மதுராவில் உள்ள திரையரங்கிற்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மீது லக்னோ போலீசில் இந்து மகாசபா காவல்துறை புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்