தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Viduthalai: நிர்வாணமாக நடிப்பது பற்றி எனக்குத் தெரியாது - விடுதலை நடிகை!

Viduthalai: நிர்வாணமாக நடிப்பது பற்றி எனக்குத் தெரியாது - விடுதலை நடிகை!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2023 01:34 PM IST

Actress Thendral Raghunathan: ஆடைகளின்றி நிர்வாணமாக நடிப்பது பற்றி எனக்குத் தெரியாது என விடுதலை பட நடிகை தென்றல் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகை தென்றல் ரகுநாதன்
நடிகை தென்றல் ரகுநாதன்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது இந்த விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், தென்றல் ரகுநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த நடிகர் சூரி இந்த திரைப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இனிமேல் நகைச்சுவை இடங்களில் அவர் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழும் அளவிற்கு அவரது நடிப்பு இந்த படத்தில் அமைந்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தென்றல் ரகுநாதன் ஆடைகள் இன்றி நிர்வாணமாக நடிக்கும் காட்சி ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், செங்கல்பட்டு பகுதியில் இயக்குநர் வெற்றிமாறன் படப்பிடிப்பில் இருந்தார். ஒரு நாள் இரவு ஏழு மணி அளவில் அவரை சந்தித்துப் பேசினேன். சரி வந்து விடுங்கள் என்று சொன்னார். வசனம் பேசுங்கள் என்று என்னை அவர் சோதனை செய்யவில்லை. மறுநாள் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

இந்த படத்தில் முதலில் நடிக்கும் பொழுது எனக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியவில்லை. இயக்குநர் வெற்றிமாறன் படம் என்பதால் இதுகுறித்து கேட்க எனக்குத் தோன்றவில்லை. படப்பிடிப்பு தளத்தில் தான் நான் காவல் நிலைய காட்சியில் ஆடைகள் இன்றி நடிக்க வேண்டும் எனக் கூறினார்கள்.

அப்படி நடிக்கும்போது எனக்குப் பயமோ, தயக்கமோ ஏற்படவில்லை. நான் அங்குப் பாதுகாப்புடன் இருப்பதாகவே உணர்ந்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் படப்பிடிப்பில் நான் ஆடைகள் என்று நிர்வாணமாக நடிக்கவில்லை. சிஜியில் எடிட் செய்து தான் அது போல் திரையில் காட்டப்பட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்பது கூட தெரியாது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது தான் நான் கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளேன் என்பது எனக்குத் தெரிய வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்