Sobhita Dhulipala: அங்கே பஞ்சாயத்து.. இங்கே நைட் பார்ட்டி.. கடுப்பில் இருக்கும் நாக சைதன்யாவை கண்டுகொள்ளாத காதலி..
Sobhita Dhulipala: நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் முன்னாள் அமைச்சர் கேடிஆரால் தான் விவாகரத்து பெற்றனர் என தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் பேசி பஞ்சாயத்தை கிளப்பிய நிலையில், நாக சைதன்யாவின் காதலியான ஷோபிதா நைட் பார்ட்டியில் குதூகலாமாக உள்ளார்.
நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றனர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றதற்கான காரணங்கள் இதுவரை வெளியே தெரியாத நிலையில், பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் தெலங்கனா அமைச்சர் சுரேகா, நாக சைதன்யாவும் சமந்தாவும் முன்னாள் அமைச்சர் கேடிஆரின் தலையீட்டினால் தான் விவாகரத்து பெற்றனர் எனக் கூறி பரபரப்பை கிளப்பினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு, நடிகை சமந்தா, நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததுடன் கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தனர். ஆனால், இந்த சமயத்தில், நாக சைதன்யாவின் காதலியான சோபிதா துலிபாலா, பாலிவுட் நடிகர்களுடன் நைட் பார்ட்டியில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
பிரிந்தாலும் விரும்பும் ரசிகர்கள்
என்னதான் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா தங்களது திருமண வாழ்க்கியிலிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும், அந்த ஜோடியை ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம். இதனால், இவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் தான், நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் பரவியது. இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்த நிலையில், இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதையடுத்து விரைவில் திருமண தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
அமைச்சர் சுரேகாவின் பேச்சு
இந்த சமயத்தில் தான், தெலங்கானா அமைச்சர் சுரேகா, நட்சத்திர ஜோடியான நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்ததற்கு முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் காரணம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதை அறிந்த நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜூனா, அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அமைச்சர் கூறிய கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
கோபமான சமந்தா
அத்துடன் நடிகை சமந்தா, எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இருவரின் தனியுரிமைக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும்படி உங்களை கேட்டு கொள்கிறேன். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்துள்ளது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து அரசியல் விவகாரத்தில் இருந்து எனது பெயரை தூரமாக வைக்க முடியுமா? ஏனென்றால் நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கிறேன். அதை கடைசி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறேன் என காட்டமாக பதிலளித்திருந்தார்.
கொதித்த நாக சைதன்யா
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த நாக சைதன்யா, அமைச்சர் சுரேகாவின் கூற்று முற்றிலும் பொய்யானது மட்டுமல்ல, அது கேலிக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள், ஆதரவு மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது. எனது முன்னாள் மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை காரணமாக நான் இதுவரை எங்கள் விவாகர்தது பற்றி வெளியான கருத்துகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து, நாக சைதன்யாவின் தாயாரும் நடிகையுமான அமலாவும், நடிகர் நானியும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இது இப்படி இருக்க, நடிகர் நாக சைதன்யாவின் காதலியான ஷோபிதா துலிபாலா நைட பார்ட்டிக்கு சென்ற செய்தியும் அதிகளவில் பரவி வருகிறது.
நைட் பார்ட்டியில் காதலி
நைட் மேனஜர் எனும் வெப் சீரிசிஸ் நடிகை ஷோபிதா துலிபாலா ஆதித்ய ராய் கபூர் மற்றும் அனில் கபூருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் எம்மி விருது விழாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனைக் கொண்டாடும் விதமாக மும்பையில் நடந்த நைட் பார்ட்டி ஒன்றில் நடிகை ஷோபிதா பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சி முன்னதாகவே நடைபெற்றிருந்தாலும், அதனை நாக சைதன்யாவின் ரசிகர்கள் தற்போது இணையத்தில் பதிவிட்டு இக்கட்டான சமயத்தில் நாக சைதன்யாவின் அருகில் இருக்காமல் இப்படி பார்ட்டி செய்யலாமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அத்தோடு நில்லாமல், நைட் மேனேஜர் சீரிஸில், ஷோபிதா நடிகர் அனில் கபூருடன் மிக நெருக்கமாகவும், அதிக முத்தக் காட்சியிலும் நடித்திருப்பார். இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். நடிகை சமந்தா ஊ சொல்றியா பாட்டுக்கு நடனமாடியதால், அவரை சைதன்யா விவாகரத்து செய்தார். ஆனால், இப்படி முத்தக் காட்சியில் மட்டும் நடிக்கலாமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.