சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.. ’தயவு செஞ்சு வேற மாதிரி எடுத்துக்காதீங்க’ .. அமைச்சர் சுரேகா வருத்தம்!
Konda Surekha : சமந்தா ருத் பிரபு, நாக சைதன்யாவின் விவாகரத்தின் பின்னணியில் பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி.ராமராவ் இருப்பதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து, கொண்டா சுரேகா தனது அறிக்கையை திரும்பப் பெற்றார்.

நாக சைதன்யாவிடமிருந்து சமந்தா ரூத் பிரபு விவாகரத்து பெற்றது தொடர்பாக தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா சமீபத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் தெலங்கானா அமைச்சர் சுரேகா. இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து சென்றதற்கு காரணமே முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான். அந்த அமைச்சரால் சமந்தா மட்டுமல்ல, பல நடிகைகளும் சினிமா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலகி காணமலே போயுள்ளனர் எனக் கூறி மக்களிடம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
சமந்தா குறித்து சுரேகா வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற்றார்
இந்நிலையில் அமைச்சர் சுரேகா கூறிய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது சமந்தா குறித்து சுரேகா வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற்றார் சுரேகா. அவர் தனது பதிவில், "ஒரு தலைவர் பெண்களை எப்படி இழிவுபடுத்துகிறார் என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே எனது நோக்கமே தவிர, உங்கள் உணர்வுகளை புண்படுத்த அல்ல சமந்தா. நீங்களே அதிவேகமாக வளர்ந்த விதம் நான் வியக்கும் மற்றும் ஆசைப்படும் ஒன்று. எனது வார்த்தைகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டிருந்தால், நான் நிபந்தனையின்றி அவற்றை திரும்பப் பெறுகிறேன். தயவு செஞ்சு வேற மாதிரி எடுத்துக்காதீங்க."
