TOP TEN NEWS: மோடியை ஓவர் டேக் செய்த ஷ்ரத்தா கபூர்.. ஐட்டம் பாடலில் சோபிதா துலிபாலா!
TOP TEN NEWS: மோடியை ஓவர் டேக் செய்த ஷ்ரத்தா கபூர் முதல் ஐட்டம் பாடலில் சோபிதா துலிபாலா நடிக்க போவதாக வெளியான டாப் 10 பாலிவுட் செய்திகள் பற்றி பார்க்கலாம்.

ஐட்டம் பாடலில் சோபிதா துலிபாலா?
ரன்வீர் சிங் தலைமையிலான க்ரைம் - த்ரில்லர் படத்திற்காக சோபிதா துலிபாலா, டான் 3 படத்தில் ஐட்டம் பாடலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சமந்தா, புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய காரணத்தினால் தான் சமந்தாவை விவாகரத்து செய்தார் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நான் கர்ப்பம் இல்லை
நடிகர் ராஜ்குமார் ராவை திருமணம் செய்து கொண்ட நடிகர் பத்ரலேகா , தனது தனிப்பட்ட வாழ்க்கையை அடிக்கடி பரிசோதிக்கிறார். இவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், கலாட்டா இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் , தொடர்ச்சியான வதந்திகள் ஆரம்பத்தில் தன்னைத் தொந்தரவு செய்ததாக ஒப்புக்கொண்டார்.
பிரபாஸுக்கு ஜோடியாகும் த்ரிஷா
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். இதில் வில்லனாக நடிக்கும் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.