தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Kajal Agarwal Kisses His Husband

கணவருக்கு முத்தம்… காஜல் வீட்டில் என்ன விசேஷம்?

Aarthi V HT Tamil
Aug 17, 2022 09:45 AM IST

காஜல் அகர்வால் தன் கணவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

கணவருக்கு முத்தம் கொடுத்த காஜல்
கணவருக்கு முத்தம் கொடுத்த காஜல்

ட்ரெண்டிங் செய்திகள்

நட்சத்திர ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் .

காஜல் அகர்வாலுக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. நீல் என தனது குழந்தை பெயர் வைத்து இருக்கிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் தனது குழந்தையின் புகைப்படத்தை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

அதில் தன் கணவரின் கன்னத்தில் முத்தமிட்டவாறு, ”உலகில் சிறந்த அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விடுமுறையில் இருந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். முன்னதாக அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தான் அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார் காஜல். மேலும் அடுத்த மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்