தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vishal: “ரொம்ப நன்றி டார்லிங் சிம்பு.. விவசாயிகளுக்கு பணத்தை கொடுத்துறேன்”- வெற்றியால் மனங்குளிர்ந்த விஷால்!

Actor Vishal: “ரொம்ப நன்றி டார்லிங் சிம்பு.. விவசாயிகளுக்கு பணத்தை கொடுத்துறேன்”- வெற்றியால் மனங்குளிர்ந்த விஷால்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 16, 2023 11:20 AM IST

மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் விஷால் நடிகர் சிலம்பரசன், நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல பேருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

மார்க் ஆண்டனி!
மார்க் ஆண்டனி!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இந்தத்திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷால் இந்த வெற்றி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், “இந்தப்பதிவை நான் வெளியிட்ட ஆகணும்னு தோணுச்சு. வெள்ளிக்கிழமை தெய்வங்களாகிய நீங்கள், மேல இருக்குற தெய்வம் ஆகியோரது ஆசீர்வாதம் இல்லாம எந்த படமும் ஜெயிச்சதே கிடையாது. 

என்னை மட்டுமல்லாம எஸ்.ஜே.சூர்யா, சுனில் உள்ளிட்ட மொத்தப்படக்குழுவையும் நீங்க ஆதரிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க கொடுத்த காசுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கீங்கன்னு நம்புகிறேன். 

தமிழ் மட்டுமல்ல இதர மொழிகளையும் திரைப்படம் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. வசூல் ரீதியா மட்டுமல்லாம, விமர்சன ரீதியாவும் எல்லாரும் பாராட்டுறாங்க. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. 

இத நான் மனசுல வச்சிக்கிட்டு இனி வரும் படங்கள்ல நல்ல உழைப்ப கொடுக்குறேன். எனக்கு நிறைய பேர் சபோர்ட் பண்ணாங்க.. டார்லிங் கார்த்தி, டார்லிங் வெங்கட்பிரபு, டார்லிங் சிம்புவாகட்டும் என எல்லோரும் மனசார பாராட்டி இருந்தாங்க.. 

இந்த வார்த்தைகளையெல்லாம் காது பட கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒன்றரை வருஷ உழைப்புக்கு, பலன் கிடைச்சிருக்குன்னு சந்தோஷமா இருக்கு. நிச்சயமா உங்களால நிம்மதியா தூங்குவேன். நான் சொன்னபடியே ஒவ்வொரு டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம்னு வச்சு.. விவசாயிகளுக்கு அந்தத்தொகையை கொடுத்துறேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்