தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ratnakumar: ரத்னகுமாருக்கு செம டோஸ் விட்ட விஜய்

Ratnakumar: ரத்னகுமாருக்கு செம டோஸ் விட்ட விஜய்

Marimuthu M HT Tamil
Nov 03, 2023 11:17 AM IST

இயக்குநர் ரத்னகுமாரை நடிகர் விஜய் திட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Ratnakumar: ரத்னகுமாருக்கு செம டோஸ் விட்ட விஜய்
Ratnakumar: ரத்னகுமாருக்கு செம டோஸ் விட்ட விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

லியோ சக்சஸ் மீட்டில் இயக்குநர் ரத்னகுமார் கூறியதாவது, "விஜய்க்கு நான் நெஞ்சை அறுத்து கொடுத்துவிடுவேன். அந்தளவு எனக்கு அவர் மீது பாசம் இருக்கிறது. பொதுவாக படம் வெளியாகும் முன்னர் படத்தைப் பற்றி பேசும் போது எனக்கு பயமாக இருக்கும். லோகேஷ் அடக்கிவாசி என்று சொல்வான்.

நான் சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் விஜய் சாரின் படங்கள் தான். எனக்கு விஜய் சாரின் பெர்சனல் வாழ்க்கை பெரிய உத்வேகம் தருவதாக இருந்துள்ளது.

நான் அவரிடம் கற்றுக்கொண்டது எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பது தான். அவருடன் யார் பேசினாலும் சமமாக நடத்துவார். அவருடன் யாராவது பேச வந்தால் உட்கார்ந்து பேச சேர் எடுத்து வருவார்கள். இல்லை அவர் நின்று பேசுவார்.

எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும். அவருக்கு சில விஷயங்கள் சரியாக அமையும். அப்படி அமைந்ததுதான் மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல். ஆம் சரியாக நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ரெய்டு வந்தது.

இந்தப் படத்திலும் நான் ரெடி பாடல் அப்படி அமைந்து இருக்கிறது. இந்த நேரத்தில் அது அவருக்கு மிக பொருத்தமாக அமைந்து இருக்கிறது" என்றார்.

இவரது பேச்சைக்கண்டு கடுப்பான விஜய்,  அவரை அழைத்து செமையாகத் திட்டியுள்ளார். 

இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில்,' விஜய் லியோ சக்சஸ் மீட்டுக்கு வந்ததின் காரணம் வேறு. குறிப்பாக, ரத்னகுமாரின் பேச்சை விஜயே ரசிக்கவில்லை. அவர் மேடையில் ரஜினியை மறைமுகத் தாக்கி பேசியது குறித்து அறிந்ததும் கடுப்பாகிவிட்டார். அவர் கீழே இறங்கி வந்ததும், ஏன் இப்படி பேசினீர்கள் என ரத்னகுமாரை கூப்பிட்டு டோஸ் விட்டுள்ளார். பின், அதன் பிறகு, ரத்னகுமாரை பார்க்கவிரும்பவில்லையாம்’ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்