தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Devarakonda: லோகேஷ்,வெற்றி மட்டும்தான் உங்க கண்ணுக்குத் தெரிவாங்களா?- கேள்வி கேட்ட செய்தியாளரை கலங்க வைத்த விஜய்!

Vijay Devarakonda: லோகேஷ்,வெற்றி மட்டும்தான் உங்க கண்ணுக்குத் தெரிவாங்களா?- கேள்வி கேட்ட செய்தியாளரை கலங்க வைத்த விஜய்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 23, 2023 11:51 AM IST

சென்னையில் நடந்த பத்திரையாளர் சந்திப்பில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விஜய் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தத்திரைப்படத்தை இயக்குநர் ஷிவ நிர்வானா இயக்கி இருக்கிறார். இந்தத்திரைப்படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய் அண்மையில் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

அப்போது முன்னதாக வெற்றிமாறன், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக விஜய் தேவரகொண்டா கூறியதை குறிப்பிட்டு செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு லோகேஷ் கனகராஜ், நெல்சன், வெற்றிமாறன் ஆகியோர்கள் தான் கண்களுக்கு தெரிவார்களா? புது முக இயக்குநர்களெல்லாம் தெரிய மாட்டார்களா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். 

அதைப்பார்த்த விஜய் தேவரகொண்டா கொஞ்சம் நிதானமாக அவரை பார்த்து, நீங்கள் என்னைப்பார்த்து வேறு இயக்குநர்கள் தெரியாதா? என்று கேட்கிறீர்கள். எனக்கு அருண்பிரபுவின் இயக்கம் மிகவும் பிடிக்கும். உங்களுக்கு அருண் பிரபு யார் என்று தெரியுமா? அவர் என்ன திரைப்படம் எடுத்திருக்கிறார் என்று தெரியுமா? என்று பதில் கேள்வி கேட்டார். ஆனால் செய்தியாளரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனைக்கேட்ட அரங்கத்தில் இருந்தவர்கள் சிரித்தார்கள். தொடர்ந்து பேசிய விஜய், “ அவர் அருவி, வாழ் திரைப்படங்களை எடுத்திருக்கிறார். எனக்கு கணம் படம் எடுத்த ஸ்ரீகார்த்தி இயக்கம் மிகவும் பிடிக்கும். கேப்டன் மில்லர் திரைப்படம் எடுத்திருக்கும் அருண் மாதேஷ்வரன் இயக்கமும் பிடிக்கும். எனக்கு இங்குள்ள திறமையாளர்கள் பற்றி நன்றாகவேத் தெரியும்” என்று பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்