தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya On Keeladi:தமிழரின் தாய்மடி கீழடி; சூர்யா நெகிழ்ச்சி ட்வீட்!

Surya on Keeladi:தமிழரின் தாய்மடி கீழடி; சூர்யா நெகிழ்ச்சி ட்வீட்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 02, 2023 10:19 AM IST

2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்

கீழடியில் சூர்யா
கீழடியில் சூர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் படி பெரியவர்களுக்கு – ரூ.15, சிறியவர்களுக்கு – ரூ.10, மாணவர்களுக்கு – ரூ.5 என கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வெளிநாட்டில் இருந்து வந்து பார்வையிடும் பார்வையாளர்களில் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும், புகைப்படம் எடுக்க 30 ரூபாயும், வீடியோ படம் எடுக்க 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிரபல நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, குழந்தைகள், தன்னுடைய அப்பா சிவக்குமார் ஆகியோருடன் கீழடிக்குச் சென்று அருங்காட்சியகத்தை கட்டணம் செலுத்தி பார்வையிட்டார். 

இவர்களுடன் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் கீழடிக்கு தான் சென்ற அனுபவம் குறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் அவர், “ பெருமிதம்!!! வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.. தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்..

அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..குழந்தைகளுடன் அனைவரும் வருக!” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் புரோமோ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகுமென தகவல் வெளியாகி இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்