அழகிய லைலாவின் ஆனந்தனுக்கு ஹாப்பி பர்த்டே.. 'மொழி'களைக் கடந்து சினிமாவில் உச்சம் தொட்ட பிருத்விராஜின் கதை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அழகிய லைலாவின் ஆனந்தனுக்கு ஹாப்பி பர்த்டே.. 'மொழி'களைக் கடந்து சினிமாவில் உச்சம் தொட்ட பிருத்விராஜின் கதை..

அழகிய லைலாவின் ஆனந்தனுக்கு ஹாப்பி பர்த்டே.. 'மொழி'களைக் கடந்து சினிமாவில் உச்சம் தொட்ட பிருத்விராஜின் கதை..

Malavica Natarajan HT Tamil
Oct 16, 2024 06:32 AM IST

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், என தனது எல்லையை விரித்துக் கொண்டே சென்றுவரும் நடிகை பிருத்விராஜின் 42வது பிறந்தநாள் இன்று..

அழகிய லைலாவின் ஆனந்தனுக்கு ஹாப்பி பர்த்டே.. 'மொழி'களைக் கடந்து சினிமாவில் உச்சம் தொட்ட பிருத்விராஜின் கதை..
அழகிய லைலாவின் ஆனந்தனுக்கு ஹாப்பி பர்த்டே.. 'மொழி'களைக் கடந்து சினிமாவில் உச்சம் தொட்ட பிருத்விராஜின் கதை..

அடாவடித் தனமும், முன்கோபமும் நிறைந்த அவர், தன் மனைவி பார்வதி தான், தங்கையை திருமணம் செய்த நபரின் முன்னாள் காதலி என்பதை அறிந்ததும் திருமணத்தை நிறுத்த என்னவெல்லாம் செய்கிறார் என்பதே கதை.

அழகிய லைலாவின் ஆனந்த்

இந்தப் படத்தில் ஒரு முரட்டுக் கணவராகவும், பாசமான மச்சானாகவும் , பின், திருமணத்தை நிறுத்த நண்பருடன் சேர்ந்து போடும் திட்டத்தால் காமெடியனாகவும் நடித்து அதகளப்படுத்தி இருப்பார். இதனால், இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் சக்கைப் போடு போட்டது. இதன்காரணமாக, பிருத்விராஜ் 2கே கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோ லிஸ்டில் இடம் பிடித்தார்.

இதனால், இவர் நடிப்பில் வெளியான பிற படங்களைப் பற்றியும் அது குறித்த சுவாரசிய தகவல்கள் குறித்தும் இவரைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர்.

ஆடு ஜீவித நடிப்பு அசுரன்

குருவாயூர் அம்பலநடையில் படம் வெளியான சமயத்தில், ப்ருத்லிராஜின் ஆடு ஜீவிதம், சலார் போன்ற படங்களும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன.

இதில், சலாரும் ஆடு ஜீவிதமும் பான் இந்தியா திரைப்படமாக வெளியானவை. பாலைவனத்தில் சிக்கித்தவித்த நபர் குறித்த உண்மைக் கதையை கூறி வெளியான ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம். இப்படத்திற்காக தன் சினிமா கெரியரில் பல ஆண்டுகளை செலவிட்டுள்ளார் பிருத்விராஜ்.

 இந்தப் படத்தை நல்ல சினிமா படைப்பாக மாற்ற கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் செலவழித்த இயக்குநர் ப்ளஸ்ஸிக்கு துணையாக இருந்துல்ளார் அவர், அந்த காத்திருப்பிற்கு வெற்றி எனும் தீனியைப் போட்டு தன் நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார் பிருத்வி ராஜ். தன் கண்கள், சுறுங்கிய கன்னத்தின் சதைகள், தாடைகள் எனத் தனித்தனியே நடிப்பை வெளிப்படுத்தி தன்னுள் இருக்கும் நடிப்புத் தீயை திரையில் எரிய விட்டிருப்பார் பிருத்விராஜ்.

சினிமா என்ட்ரி

அப்பா, அம்மா என அனைவரும் சினிமா பின்புலத்தைக் கொண்டிருப்பதால், இவர் சினிமாவிற்குள் நுழைவதற்காக பெரிதும் மெனக்கெடவில்லை என பிருத்விராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். இவரின் முதல் படமான நந்தனம் 2002ம் ஆண்டு வெளியானது. இதற்கு முன் நடிகர் பகத் பாசிலின் தந்தையான இயக்குநர் பாசிலினால் இவர் ஹீரோவாக அறிமுகப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் நடக்காமல் போனதால், அவர் செய்த சிபாரிசின் மூலம் நந்தனம் படத்தில் நடித்தார்.

மலையாளத்தில் ஹீரோ தமிழில் வில்லன்

பின் மெல்ல மெல்ல அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த அலருக்கு கிளாஸ்மேட்ஸ் திரைப்படம் மக்களின் குட்புக்கில் இடம்பெற வைத்தது. பின் அவரின் நடிப்புத் திறமையைக் கண்ட மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் அவரை தமிழ் சினிமாவிற்குள் அழைக்குவந்து கனா கண்டேன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். சினிமாவில் அப்போது தான் வளர ஆரம்பிக்கும் ஒருவரை வில்லனாக்கி அழகு பார்ப்பதெல்லாம் அவ்வளவு சாதாரணமானது அல்ல.

பாரிஜாத நாயகன்

பின்னர் பிருத்விராஜ் அதோடு நில்லாமல், தமிழில் தொடர்ந்து கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்திருப்பார். தமிழில் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் பாரிஜாதம். பாக்கியராஜ் இயக்கத்தில் அவரின் மகள் கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்திருப்பார். 2006ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியாகி இருந்தாலும், இப்படத்தில் வரும் உன்னைக் கண்டேனே முதல் முறை பாடல் இன்றளவும் ஒரு ப்ளிஸ் தான்.

மொழிகளை கடந்த நடிகர்

இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஹீரோ மெட்டிரியலாக அறியப்பட்டவருக்கு அடுத்தடுத்து சத்தம் போடாதே, மொழி, கண்ணாமூச்சி ஏனடா, என பல படங்கள் ஒப்பந்தம் ஆனது. இவர் ராதாமோகனின் இயக்த்தில் வெளியான மொழி படத்தில் பிரகாஷ் ராஜூடன் சேர்ந்து செய்திருக்கும் காமெடி இன்றளவும் பார்ப்போரை சிரிக்க வைக்கும். காதலுக்கோ மனிதர்களை புரிந்து கொள்வதற்கோ மொழி அவசியமில்லை. மனம் இருந்தால் போதும் என்பதை அத்தனை அழகாக நடித்து கைதட்டல் வாங்கியிருப்பார் பிருத்விராஜ்.

முதல் படத்திலேயே வெற்றி இயக்குநர்

இதையடுத்து சில குறிப்பிட்ட படங்களை மட்டும் தேர்வு செய்து தமிழில் நடித்து வந்த இவர் திடீரென 2019ம் ஆண்டில் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். நடிகர் மோகன்லாலின் லூசிஃபர் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி இயக்குநராக உருவாகினார். பின் தன்னால் காமெடி படத்தையும் இயக்க முடியும் என உறுதியாகி அதையும் மக்களுக்கு ப்ரோ டாடி படத்தின் மூலம் விருந்து படைத்திருப்பார்.

பலதுறை நாயகன்

சரி இத்துடன் நிறுத்திவிடுவார் என நினைத்தால், அவர் பாடகராகவும், தயாரிப்பாளராகவும், நடன இயக்குநராகவும், டப்பிங் அர்டிஸ்டாகவும், வசனகர்தாவாகவும் உருமாறி சினிமாவில் தனக்கு எல்லைகளே இல்லை என பல துறைகளில் கால் பதித்து மக்களை திணறிடித்து வருகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.,

இவரது படங்களில் மக்கள் மத்தியல் செல்லுலாய்டு, உருமி, அய்யப்பனும் கோஷியும், ஜன கன மன, சலார்-1 போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

நல்ல மனிதம் கொண்ட நபர்

இப்படி ஹீரோ, வில்லன், காமெடியன், குணச்சித்திர நடிகனாக திரைக்குள்ளும், இயக்குநர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குநர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என திரைக்கு வெளியிலும் தனது முத்திரைகளை பதித்த இவர் , உண்மையில் நல்ல மனிதர் கூட. அதர்கு எடுத்துக்காட்டு, பேட்டிகளில் வெளிப்படும் அவரது முதிர்ச்சியான பேச்சுகள் தான். அப்படிப்பட்ட நல்ல மனிதருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.