Lucifer sequel update: அடுத்த ஆண்டில் லூசிஃபர் இரண்டாம் பாகம் எம்புரான் ஷுட்டிங்
மலையாளத்தில் ஹிட்டடித்தி லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகும் எம்புரான் படம் குறித்த அப்டேட்டை வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விட பிரமாண்டமாக உருவாகும் இரண்டாம் பாகம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கதையாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூசிஃபர் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு. புகைப்படத்தில் இடமிருந்து வலம் படத்தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், நடிகர் மோகன்லால், படத்தின் இயக்குநர் ப்ருத்விராஜ், திரைக்கதை ஆசிரியர் முரளி கோபி
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 2019இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் லூசிஃபர். ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் மலையாள படமாக அமைந்திருந்த இதை, மோகன்லாலின் தீவிர ரசிகரும், மலையாள சினிமாவின் ஹீரோவுமான ப்ருத்விராஜ் இயக்கியிருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியான இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
அதில், லூசிஃபர் இரண்டாம் பாகம் எம்புரான் என்ற பெயரில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக படத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை.
