12 Years of Payanam: சீட் நுனி திரில் தந்த இயக்குநர் ராதாமோகனின் 'பயணம்'
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  12 Years Of Payanam: சீட் நுனி திரில் தந்த இயக்குநர் ராதாமோகனின் 'பயணம்'

12 Years of Payanam: சீட் நுனி திரில் தந்த இயக்குநர் ராதாமோகனின் 'பயணம்'

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 11, 2023 06:50 AM IST

மெல்லிய உணர்வுகளை அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் விதமாக எளிமையாக காட்சிப்படுத்தி பீல் குட் படங்களை தந்த ராதா மோகன் இயக்கிய திரில்லர் படம் பயணம். காந்தகர் விமான கடத்தல் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.

ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் திரில்லர் படமாக அமைந்த பயணம்
ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் திரில்லர் படமாக அமைந்த பயணம்

நாகார்ஜுனா, சனாகான், பூனம் கெளர், ரிஷி பிரம்மாநந்தம் உள்பட ராதாமோகன் படங்களில் தோன்றும் நட்சத்திரங்களான எம்எஸ் பாஸ்கர், தலைவாசல் விஜய், சாம்ஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள்.

கடத்தப்பட்ட விமானம், விமான நிலையம், பேச்சுவார்த்த நடைபெறும் அறை, பிளாஷ் பேக் காட்சியில் தீவிரவாதியை பிடிக்க காஷ்மீர் என விரல் விட்டும் எண்ணும் அளவிலான லொக்கேஷன்களில் மொத்த படம் காட்சிகளும் இடம்பிடித்திருந்தாலும் ஜெய்பீம் இயக்குநர் டிஜே ஞானவேல், ராதாமோகன் ஆகியோர் இணைந்து அமைத்த விறுப்பான திரைக்கதை, வசனம் எந்தவொரு இடத்தில் சலிப்பு தட்டாமல் படத்தின் மீது முழு கவனத்தையும் பார்வையாளர்களை செலுத்த வைத்தது.

பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் துணிவு படத்தின் சில காட்சிகள் அன்றாட நிகழ்வுகளை பிரதிபலிப்பதாக அமைந்து இருந்தது ரசிகர்களை படம் மீது எளிதாக கனெக்ட் செய்தது. அதுபோல் விமான கடத்தல் உண்மை சம்பவம், அதில் சிக்கி கொள்ளும் பயணிகளில் அமைச்சர், பிரபல நடிகர், அவரை தெய்வமாக பார்க்கும் சாமனிய ரசிகன், டாக்டர், சாப்ட்வேர் எஞ்சினியார், வேலை தேடும் பட்டதாரி, முன்னாள் ராணுவ வீரர், ஜோசியர், சர்ச் பாதிரியார், எதிரநாடாக கருத்தப்படும் பாகிஸ்தான் பயணிகள், அவர்களுடன் தீவிரவாதிகள் என பல்வேறு விதமான பாத்திர படைப்புகளும், அவை வெளிப்படுத்திய நுட்பமான உணர்வுகளும் எதார்த்தை மீறாத சினிமா காட்சிகளாக இருந்துள்ளன.

குறிப்பாக இதுபோன்ற பதட்டமான சூழ்நிலையில் ஊடங்கங்கள் பொறுப்புதன்மை, உண்மை தகவல்கள் பெற அவர்கள் மேற்கொள்ளும் குறுக்கி வழிகளை விமர்சிக்கும் விதமாக அமைந்த காட்சிகள் கைதட்டல்களை பெற்றன. இதேபோல் பேச்சுவார்த்தைக்கு இடையே "முடிவு எடுக்காமல் இன்னும் முந்திரி பக்கோடா சாப்பிடுகிறீர்களா?" என தீவிரவாதியின் நக்கல் அக்மார்க் பகடியாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் சமதான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் மிக பெரிய சிக்கல் ஏற்பட அதை மாற்று வழியில் யோசித்து கையாண்ட படம் சுபம் என முடித்த விதம் ஒரு முழு நீள சிட் நுனி திரில்லர் பயண அனுபவத்துடன், நல்ல படம் பார்த்த திருப்தியையும் ரசிகர்களுக்கு அளித்தது.

காந்தகர் விமான கடத்தில் சம்பவத்தில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடத்தப்பட்ட விமானத்தில் பணயக்கைதிகளாக இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த பயணம் படத்தில் அந்தவொரு விஷயத்தில் மட்டும் சினிமாத்தனம் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாகவே இருந்தது.

இந்த நூற்றாண்டில் வந்த சிறந்த திரில்லர் படங்களில் பயணம் படத்துக்கும் முக்கிய இடம் உண்டு.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.