'சூர்யா ஒரு ஜால்ரா புருஷன்.. கட்டு சோறுல பூசணிக்காவ மறச்சி மாட்டிக்கிட்டாரு' குண்டைத் தூக்கிப்போடும் பயில்வான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'சூர்யா ஒரு ஜால்ரா புருஷன்.. கட்டு சோறுல பூசணிக்காவ மறச்சி மாட்டிக்கிட்டாரு' குண்டைத் தூக்கிப்போடும் பயில்வான்

'சூர்யா ஒரு ஜால்ரா புருஷன்.. கட்டு சோறுல பூசணிக்காவ மறச்சி மாட்டிக்கிட்டாரு' குண்டைத் தூக்கிப்போடும் பயில்வான்

Malavica Natarajan HT Tamil
Nov 03, 2024 11:39 AM IST

ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் பல்வேறு கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

'சூர்யா ஒரு ஜால்ரா புருஷன்.. கட்டு சோறுல பூசணிக்காவ மறச்சி மாட்டிக்கிட்டாரு' குண்டைத் தூக்கிப்போடும் பயில்வான்
'சூர்யா ஒரு ஜால்ரா புருஷன்.. கட்டு சோறுல பூசணிக்காவ மறச்சி மாட்டிக்கிட்டாரு' குண்டைத் தூக்கிப்போடும் பயில்வான்

சூர்யா- ஜோதிகா இடையே சண்டை

இந்நிலையில், சமீப காலமாக ஜோதிகாவிற்கும் சூர்யா குடும்பத்திற்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜோதிகா சூர்யாவைப் பிரிந்து அவரது தாய், தந்தையுடன் மும்பையில் குடியேறி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என்ற தகவல்கள் அதிகளவில் வெளியானது.

இதுகுறித்து ஜோதிகா எந்த பதிலும் அளிக்காத நிலையில் இந்த தகவல்களை மக்கள் கிட்டத்தட்ட உண்மை என நம்பினர். அந்த சமயத்தில் தான், ஜோதிகா எனக்காவும் குடும்பத்திற்காகவும் 20 வருடங்களாக அவரது தாய், தந்தையை பிரிந்து இருந்கார். இப்போது, நான் அவருக்காக சிந்திக்கத் தொடங்கியுள்ளேன். அவருக்கும் அவரது குடும்பமும், நண்பர்களும் முக்கியம் என்பதை உணர்ந்து தற்போது மும்பையில் அவர் இருக்க நான் முழு ஒத்துழைப்பை வழங்குகிறேன் எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

பற்ற வைத்த பயில்வான்

ஆனால், சமீபத்தில் நடந்த சில விஷயங்கள் மீண்டும் சூர்யா- ஜோதிகா குறித்து வதந்திகளை பரப்பி வந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் சக்தி சினி நியூஸ் எனும் யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அதில், சூர்யா செய்த ஒரே தவறு அவரது அப்பா சிவக்குமாரை எதிர்த்து நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டது தான். இதனால், அவர்கள் வீட்டில் தினமும் சண்டை தான். இவற்றை எல்லாம் பார்த்து பார்த்து சூர்யா, ஜோதிகாவிற்கு ஜால்ரா அடிக்கும் கணவராக மாறிவிட்டார். இதனால், கணவர் சொல் கேட்டு நடக்க ஜோதிகா தவறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் மனைவியை அடக்கி ஆளும் திராணி அற்றவராக சூர்யா உள்ளார். அதனால் தான் இப்படி நடந்துகொள்கிறார் என மிக அபத்தமாக பேசியுள்ளார்.

சிவக்குமாரால் தான் சண்டையே

மேலும், சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் அவரது அப்பா சிவக்குமாரால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் தான் ஜோதிகா அவரது அம்மா, அப்பாவுடன் இருக்க வேண்டும் என சண்டையிட்டு மும்பை சென்றார். அவருக்கு உண்மையில் கணவர் மேல் அக்கறை இருந்தால், சூர்யாவின் பட புரொமோஷனுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை.

சூர்யாவை மூக்கறுத்த சிவக்குமார்

சென்னையில் நடந்த கங்குவா இசை வெளியீட்டு விழாவில், சூர்யாவின் அப்பா சிவக்குமார், அம்மா, தம்பி கார்த்தி என குடும்பத்தார் அனைவரும் பங்கேற்றனர். அங்கு, அனைவர் முன்னிலையிலும் மகன் சூர்யாவை சிவக்குமார் மூக்கறுத்து இருப்பார்.

இதுவரை மகனைப் பற்றி வெளியில் எதுவும் பேசாத சிவக்குமார், தன் மகனுக்கு கல்லூரியில் சீட்டு தரவில்லை எனக் கூறி அசிங்கப்படுத்தியிருப்பார். இவர் சூர்யாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்றே தான் இப்படி பேசி இருக்கிறார் எனவும் கூறினார்.

சூர்யாவை அசிங்கப்படுத்திய கங்குவா நடிகை

அத்துடன் நில்லாது. சூர்யாவை அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, கங்குவா படத்தில் நடித்த திஷா பதானி கூட அசிங்கப்படுத்தி இருப்பார். சூர்யா உயரம் குறைவானவர் என்பதால் அவர் அருகில் நிற்கக் கூடத் தயங்கி கங்குவா வில்லன் பாபி தியோல் அருகில் போய் நின்றார். அதுமட்டுமல்லாது, சூர்யாவை பாலிவுட்டில் யாருக்கும் தெரியாது. அவருக்கு அங்கு எந்த பெயரும் இல்லாததால் அவர் சூர்யா அருகில் செல்வதையே நிராகரித்தார் என குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.

கண்டுகொள்ளாத ஜோதிகா

மேலும், சென்னையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால், ஜோதிகா மும்பையிலேயே இருந்துகொண்டு சூர்யா பட புரொமோஷனுக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, சென்னையில் நடந்த விழாவிற்கு வந்தால் சூர்யாவின் அப்பா முகத்தில் முழிக்க வேண்டும் என்பதால் தான் ஜோதிகா வரவில்லை என விவரம் தெரிந்தவர்கள் கூறகின்றனர். ஆனால், சூர்யா தன் குடும்ப பிரச்சனையை கட்டுச் சோறில் பூசணிக்காயை மறைப்பது போல் மறைக்கிறார் என பயில்வான் விமர்சித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.