“அவதான் என்னோட டீச்சர்; அவதான் என்னோட தத்துவ ஞானி..அவளுக்கும் ஆசை இருக்கும்ல” - ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி!
அவளுக்கும் அவளுடைய நண்பர்கள் தேவை. அவளுக்கும் அவளுடைய பெற்றோர் தேவை. அவளுக்கு மரியாதை தேவை; அவளுக்கும் சுதந்திரம் தேவை. அவளுக்கும் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் தேவை! - ஜோதிகா உடன் மும்பை ஷிஃப்ட் ஆனது ஏன் என்பதற்கு சூர்யா விளக்கம்!

“அவதான் என்னோட டீச்சர்; அவதான் என்னோட தத்துவ ஞானி..அவளுக்கும் ஆசை இருக்கும்ல” - ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி!
நடிகர் சூர்யா மும்பைக்கு ஷிஃப்ட் ஆனது ஏன் என்பது குறித்து ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து பேசும் போது, “நான் வேலை மற்றும் பர்சனல் வாழ்க்கையை அழகாக பேலன்ஸ் செய்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் என்னை பொருத்தவரை அது பத்தாது. எப்போதுமே என்னுடைய பிரதிநிதித்துவம் குடும்பத்திற்குதான்.