"இதுல என்னோட கௌரவம் இருக்கு.. இந்தத் தப்ப மட்டும் பண்ணிடாத" சூர்யாவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய சிவக்குமார்
சூர்யா அவரது இளமை காலத்தில் செய்த சேட்டைகளை பேசி கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சுவாரசியத்தை கூட்டியுள்ளார் நடிகர் சிவக்குமார்.

சூர்யா, திஷா பதானி நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் பங்கேற்றார். அப்போது, அவர் சூர்யாவின் இளமைக் காலம் குறித்தும் சூர்யா சிவக்குமாரின் கௌரவத்தையே காப்பாற்றியது குறித்தும் சில விஷயங்களைக் கூறி விழா அரங்கையே சுவாரசியமாக்கி இருப்பார்.
சூர்யாவை நிராகரித்த கல்லூரி
நடிகர் சிவக்குமார் பேசுகையில், சூர்யாவை லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கலாம் என எண்ணி அங்கு அட்மிஷன் போடச் சென்றோம். அப்போது சூர்யாவிற்கு அங்கு இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதனால் நான் போய் கல்லூரியின் பிரின்சிபலை பார்த்து என்ன பிரச்சனை என கேட்டேன்.