தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  A R Rahman Concert: “ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் என்னோட குடும்பமும் இருந்துச்சு” - குண்டை தூக்கிப் போட்ட கார்த்தி!

A R Rahman Concert: “ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் என்னோட குடும்பமும் இருந்துச்சு” - குண்டை தூக்கிப் போட்ட கார்த்தி!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 12, 2023 11:24 AM IST

ரஹ்மான் நடத்திய இசைக்கச்சேரி சர்ச்சையாக மாறியிருக்கும் நிலையில், நடிகர் கார்த்தி அவருக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி சர்ச்சை!
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி சர்ச்சை!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சம்பவத்தால் ஏ.ஆர்.ரஹ்மானை பலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை ஒன்றைவெளியிட்டார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ நாங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை 3 தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்திருக்கிறோம், நேசிக்கிறோம்.

கச்சேரியின் போது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், அவர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்பது தெரியும். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் எனது குடும்பத்தினரும் கச்சேரியில் இருந்தனர். 

ரஹ்மான் சார் எப்போதும் தனது அன்பை அனைவருக்கும் கொடுப்பதால், வெறுப்பை விட அன்பை தேர்வு செய்யுமாறு அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக யுவன் வெளியிட்ட அறிக்கையில், “ ஒரு பெரிய இசைக்கச்சேரியை நடத்துவது என்பது மிகவும் சிக்கலான வேலை. இதில் மக்களைக்கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை சரிசெய்தல் என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒருங்கிணைப்பில் பிரச்சினை எழும் போது கூட்ட நெரிசல் உள்ளிட்ட எதிர்பாராத பிரச்சினைகள் பெரிய இசைக்கச்சேரிகள் நடக்கும் போது உண்டாகும்.

நமமுடைய நோக்கம் சரியானதாக இருந்தாலும், சில விஷயங்கள் தவறாக சென்று விடும். ஆகையால் இசைக்கும் மதிப்பளிக்கும் மக்கள் கடுமையான அழுத்ததை சந்திக்க நேரிடலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியம். 

நாங்கள் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது அனைத்தும் சுமூகமாக நடப்பதையும், மக்கள் பாதுகாப்பாக இருப்பதையும் கண்காணிக்க தயாரிப்பாளர்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். 

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையில் மனதை கனக்கச் செய்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக பங்கெடுக்க அனைத்து கலைஞர்களுக்கு இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாக அடித்திருக்கிறது” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறது.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்