தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சூது கவ்வும் 2- முக்கிய கதாபாத்திரத்தில் இவர்..சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி?

சூது கவ்வும் 2- முக்கிய கதாபாத்திரத்தில் இவர்..சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி?

Divya Sekar HT Tamil
Apr 14, 2023 11:47 AM IST

Soodhu Kavvum 2 : சூது கவ்வும் 2ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூது கவ்வும்
சூது கவ்வும்

ட்ரெண்டிங் செய்திகள்

திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.35 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் சிவி குமார் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சூது கவ்வும் 2 பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாகவும் படத்தில் அவரது கேரக்டரை டெவலப் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்