தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Vijayakanth: ’கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது மறுப்பா?’ போட்டு உடைத்த பிரேமலதா விஜயகாந்த்!

Vijayakanth: ’கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது மறுப்பா?’ போட்டு உடைத்த பிரேமலதா விஜயகாந்த்!

Kathiravan V HT Tamil
Apr 28, 2024 01:53 PM IST

”சென்னையில் எத்தனை பேர் ஓட்டு போட்டீர்கள் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். தமிழ்நாட்டிலேயே சென்னைதான் குறைவான வாக்குப்பதிவு நடந்து இருப்பது நமக்கு தலைகுனிவு”

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி:- பத்மபூஷன் விருது கிடைப்பது தள்ளிபோய் உள்ளதே? 

போன வாரம் அழைப்பு வரவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விருது வழங்கும் ஹால் அமைப்பு மிக சிறியது என்பதால், 3 அல்லது 4 பிரிவுகளாக விருதுகளை தருகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்தது. வரும் 9ஆம் தேதி கேப்டனுக்கு பத்மபூஷன் விருதை வழங்க உள்ளனர். என்னை 8ஆம் தேதி இரவே வர சொல்லி உள்ளனர். 

கேள்வி:-கோவை வெப்பம் காரணமாக பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே?

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறப்பது உள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் ஒரு வாரகாலம் தள்ளி பள்ளிகளை திறக்க வேண்டும். குழந்தைகளை அரசு பாதுகாப்பது அவசியம். 

கேள்வி:- விருதுநகரில் விஜயபிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

விஜய பிரபாகரன் ஒரு மாதம் விருதுநகரில் தங்கி இருந்து எல்லா கிராமத்திலும் சென்ற வேட்பாளராக உள்ளார். எல்லோரின் ஆசையும் கேப்டன் மகன் இங்கு போட்டியிடுகிறார் என்பதுதான். பெண்கள், இளைஞர்கள், புதிய வாக்கார்கள் விஜயபிரபாகரனுக்கு வாக்கு அளித்ததாக கூறுகிறார்கள். ஜூன் 4ஆம் தேதி பொறுத்து இருந்து பார்ப்போம். 

கேள்வி:- வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு விட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே?

தேர்தல் ஆணையம் முன் கூட்டியே கூட்டம் போட்டு வாக்காளர் பட்டியல்களை தருகின்றனர். பூத் கமிட்டி இருப்பவர்கள் அதை ஆராயவே அதனை தேர்தல் ஆணையம் செய்கின்றனர். ஆனால் அதனை தவறவிட்டுவிட்டு தேர்தல் நாள் அன்று நமக்கு ஓட்டு உள்ளதா இல்லையா என சோதிக்கின்றனர். சென்னையில் எத்தனை பேர் ஓட்டு போட்டீர்கள் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.  தமிழ்நாட்டிலேயே சென்னைதான் குறைவான வாக்குப்பதிவு நடந்து இருப்பது நமக்கு தலைகுனிவு. ஆனால் சென்னையில் பீச், பார்க், கிளப்களில் அரசியல்தான் பேசுவார்கள், ஆனால் ஓட்டு மட்டும் போடமாட்டார்கள். வெறும் கருத்துகளை சொல்வதை விட்டுவிட்டு ஜனநாயக கடமை ஆற்றுவது அவசியம்.

கேள்வி:- நீலகிரியில் வாக்குப்பெட்டிகள் இருந்த அறையில் சிடிடிவி கேமிராக்கள் ஆஃப் செய்யப்பட்டுள்ளதே?

நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இது கண்டிக்க கூடிய விஷயம், இந்த சம்பவம் ஏன் நடந்து என தெளிவுப்படுத்த வேண்டும். தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்கு காத்திருப்பது போல் எல்லோரும் காத்திருக்கின்றனர். அதை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை

கேள்வி:-இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி உள்ளதே?

அவரவர்கள் வெற்றிக்காக பல கருத்துகளை சொல்கிறார்கள். இவை அனைத்துமே தேர்தல் வெற்றிக்கான வியூகம்தான். பிரதமர் என்பவர் இந்தியாவுக்கு முதன்மை ஆனவர். அப்படி இருக்கும்போது, மோடி அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். 

கேள்வி:- அதிமுக உங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்களா? 

அதிமுக எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதை நீங்கள் களத்திலேயே பார்த்து இருக்கலாம். எல்லா இடத்திலும் அதிமுக-தேமுதிக தொண்டர்கள் இணைந்து பணியாற்றினார்கள். 

கேள்வி:- தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகிறதே?

தமிழ்நாட்டில் நடக்கும் சாதி ஆணவக் கொலைகள் கண்டிக்கக்கூடியது. அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கஞ்சா போதையில் போலீசை அடிக்கின்றனர். காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. அரசு கவனம் செலுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். 

WhatsApp channel