தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Thalikku Thangam Scheme: ’தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது யார்?’ புள்ளி விவரத்துடன் விளாசிய பிடிஆர்!

Thalikku Thangam Scheme: ’தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது யார்?’ புள்ளி விவரத்துடன் விளாசிய பிடிஆர்!

Kathiravan V HT Tamil
Apr 09, 2024 05:23 PM IST

”ஆட்சி மாறும் முன்னர் இருந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தங்கமும் வாங்காமல், நிதியும் தராமல் தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக அரசே நிறுத்தி வைத்து இருந்தது”

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய அவர், நேற்று முன் தினம் முதல் அதிமுக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பச்சை பொய்யை சொல்லி வருகிறது, தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சி வந்த பிறகுதான் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டு கின்றனர். 

நான் சட்டமன்றத்தில் சொன்ன உண்மையை உங்களிடம் சொல்கிறேன். சட்டமன்றத்தில் தவறான தகவலையோ அல்லது பொய்யையோ சொன்னால் அந்த பொறுப்பில் இருந்தே நீக்க முடியும். 

நான் நிதியமைச்சராக இருந்தபோது எனது கவனத்திற்கு வந்தது, ஆட்சி மாறும் முன்னர் இருந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தங்கமும் வாங்காமல், நிதியும் தராமல் தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக அரசே நிறுத்தி வைத்து இருந்தது. அதை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார்களே தவிர 4 ஆண்டுகளுக்கு தாலியும் வாங்கவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை. 

அப்போது நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ”ஓராண்டுக்கு 690 கோடி ரூபாய் மதிப்பில் நடக்க வேண்டிய திட்டத்தை 4 ஆண்டுகளாக செய்யவில்லை. 4 ஆண்டுகளாக திருமணம் ஆனவர்கள் தாலிக்கு எங்கே சென்றார்கள்? 4 ஆண்டு திட்டம் தொடங்காமல் இருந்தால் மீண்டும் திருப்பி தொடங்கினால் 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டி வரும். ஓராண்டு திட்டத்தை நிறுத்தி வைத்தாலே அதனை மீண்டும் செயல்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. அதனால் அந்த 690 கோடி ரூபாயும் பெண்கள் ஊக்கத்தொகையாக மாதம் 1000 கொடுக்கும் புதுமை பெண் திட்டத்தை கொண்டு வந்தோம்”

கல்வியை ஊக்குவிக்கத்தான் தாலிக்கு தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது, ஒருகாலத்தில் பெண்களுக்கு திருமணம்தான் பெண்களுக்கு பெரிய இலக்காக இருந்தது, ஆனால் தற்போது பெண்கள் கல்வி பெறுவதாகவே நாங்கள் பணம் கொடுக்கிறோம். 10 ஆம் வகுப்பு முடித்த பெண்கள் அனைவருக்கும் உயர்கல்வி படிக்க ஆயிரம் ரூபாய் தருகிறோம். 

சாதாரண தேர்தலாக இருந்தால் எதிர்கட்சி வேட்பாளர் உடன் ஒப்பிட்டு பார்த்து ஒட்டு போடுங்கள் என்று சொல்லி இருப்பேன். ஆனால் இந்த தேர்தல் அதைவிட முக்கியமான தேர்தல், இந்தியாவில் ஜனநாயகத்தையே படுகொலை செய்து பணநாயகம் அடிப்படையில் டெல்லியில் ஆட்சி நடந்து வருகிறது. 

மாநில உரிமைகளை பறிக்கிறார்கள், வளர்ந்த மாநிலங்களுக்கு நிதியை பறிக்கிறார்கள், அந்த நிதியை பகிர்ந்து தரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தால் வளர்ச்சி அடைய முடியவில்லை, ஏனென்றால் அங்கு பெண்களுக்கும், அனைத்து சமுதயா மக்களுக்கும் கல்வி மற்றும் உரிமைகளை கொடுப்பதே இல்லை. 

பொருளாதார ரீதியாக இந்திய நாட்டை வங்கதேச நாட்டை விட பின்னுக்கு தள்ளிவிட்டது இந்த அரசு, வங்கதேசம் என்ற நாட்டை இந்தியாதான் உருவாக்கியது. ஆனால் அந்த வங்கதேசத்தை விட இந்தியா பின் தங்கிவிட்டது. 

பணமதிப்பிழப்பு, திட்டமிடாமல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி, கொரோனா காலத்தில் திட்டமிடப்பட்டாத லாக்டவுன் போன்ற செயல்பாடுகளால் இந்திய பொருளாதாரத்தை பாஜக கொன்றுவிட்டது.  

யார் எதை படிக்க வேண்டும், யார் என்ன சாப்பிட வேண்டும், யார் என்ன மொழியை படிக்க வேண்டும் என்பதில் இவர்கள் தலையீடு செய்கிறார்கள், இந்த அரசு நூறு சதவீதம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது. 

ஊழலுக்கும் பாஜகவுக்கும் உள்ள நெருங்கிய உறவு உள்ளது. ஊழலை பெற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

2014ஆம் ஆண்டு இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் ரெய்டு நடத்தி வழக்குப்போட்ட 25 எதிர்க்கட்சித் தலைவர்களை வழக்குகளை ரத்து செய்து தங்கள் கட்சியில் சேர்த்து வெள்ளையோடு வெள்ளையாக்கிவிட்டார்கள் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். 

WhatsApp channel