தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Santhanam Deleted The Video He Posted About Periyar Amid Controversy

Santhanam: ’பெரியாரை சீண்டிய சந்தானம்!’ வறுக்கும் நெட்டிசன்கள்! விளாசும் பிடிஆர்! பரவும் வீடியோ!

Kathiravan V HT Tamil
Jan 16, 2024 11:28 AM IST

”நடிகர் சந்தானம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் பழைய வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது”

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் மற்றும் நடிகர் சந்தானம் ட்வீட்
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் மற்றும் நடிகர் சந்தானம் ட்வீட்

ட்ரெண்டிங் செய்திகள்

மேகா ஆகாஷ், ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மெட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் 2ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ’ என்று இடம்பெற்றுள்ள வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆனது.

தை பொங்கலையொட்டி நேற்றைய தினம் நடிகர் சந்தானம் வெளியிட்ட வீடியோவில், தனது வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தில் இடம்பெற்றும் ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ என்ற ஆடியோவுக்கு நா அந்த ராமாமி இல்ல’ என பதில் கூறும் டப்ஸ்மாஷ் வீடியோவை நடிகர் சந்தனம் ட்வீட் செய்து இருந்தார்.

இந்த வீடியோவை வெளியான சில நேரத்தில் சமூகவலைத்தளங்களில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்களின் ஆதரவாளர்களும், பாஜக ஆதரவாளர்களும் சந்தானத்தின் வீடியோவைக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை முன் வைத்தனர்.

விவகாரம் பெரிதான நிலையில் தனது ட்வீட்டர் பதிவை சந்தானம் நீக்கினார். இருப்பினும் நடிகர் சந்தானத்தின் செயலுக்கு பலரும் கண்டனமும் ஆதரவும் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சந்தானம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் பழைய வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.