தமிழ் செய்திகள்  /  Elections  /  Filing Of Nominations For The Lok Sabha Elections In Tamil Nadu Starts Today At 11 Am

Nomination Filing : வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.. செய்ய வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்ன? முழு விவரம் இதோ!

Divya Sekar HT Tamil
Mar 20, 2024 08:05 AM IST

Lok Sabha Elections : தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 பேருக்கு மட்டும் அனுமதி.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

ட்ரெண்டிங் செய்திகள்

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப்பதிவு, முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 28ஆம் தேதி தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில், மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

போட்டியிட விரும்பாதவர்கள், மனுக்களை வாபஸ் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கப்படும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 பேருக்கு மட்டும் அனுமதி.

வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளதாவது,

மனுதாக்கல் செய்ய வேண்டிய இடம் மற்றும் நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பை, வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிட வேண்டும். வேட்புமனுக்களை யாரிடம் கொடுக்க வேண்டும் என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர் தான் தெரிவிப்பார்.

அதேபோல எந்த அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர் தான் தெரிவிப்பார். அதேபோல தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும் நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்பாளரின் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதுவும் மனுதாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும்.

மனுதாக்கலின்போது, வேட்பாளர் உட்பட5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மனுதாக்கல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். மனுதாக்கலின் கடைசி நாள் பிற்பகல் 2 மணி முதல் இறுதி வரை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.

கட்டணம் : பொது வேட்பாளராக இருந்தால் ரூ.25,000,

ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் ரூ.12,500

அரசியல் கட்சிகளின் வேட்பாளராக இருந்தால் கட்சி அளிக்கும் சின்னத்துக்கான படிவம் இடம்பெற வேண்டும். ஒருவர் முன்மொழிய வேண்டும்.

சுயேச்சையாக இருந்தால் அந்ததொகுதியில் வசிக்கும் 10 பேர்முன்மொழிந்திருக்க வேண்டும். அதில் ஒருவர் மனுதாக்கலின்போது உடன் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பூர்த்தி செய்த மனுவை நேரில் தான் வழங்க வேண்டும். வேட்புமனுவுடன் பிரமாண பத்திரத்தையும் வழங்க வேண்டும்.

மனுவில்தவறு இருந்தால், தேர்தல் நடத்தும் அலுவலர் அதுதொடர்பாக வேட்பாளரிடம் தெரிவிப்பார். வேட்பாளர், அதை திருத்தி, மனுதாக்கலின் கடைசி நாளுக்குள் வழங்க வேண்டும்.

WhatsApp channel