Erode By-Election: ஈரோடு இடைத்தேர்தல் - புரட்டிப்போட்ட வாக்களிக்காத வாக்குகள்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 56 ஆயிரத்து 959 பேர் வாக்களிக்கவில்லை எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி இன்று நடைபெற்றது. மார்ச் இரண்டாம் தேதி அன்று இதன் வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார்.
இவர் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசை விட 66,233 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 547 மொத்த வாக்குகள் ஆகும். இது தபால் ஓட்டுகள் 398 ஆகும்.
இந்த தொகுதியில் 238 வாக்குச் சாவடிகளில் தேர்தலின் போது ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 190 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தபால் ஓட்டுக்களுடன் சேர்த்து ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 588 ஓட்டுகள் ஆகும். இந்த கணக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 56 ஆயிரத்து 959 ஓட்டுகள் பதிவாகவில்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும் 100 விழுக்காடு வாக்களிப்பு என்ற பிரச்சாரத்தைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தப்பட்டாலும் ஆனால் தேர்தலின் போது சுமார் 75 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இந்த வாக்குகளும் தேர்தலில் போட்டியிட்ட கச்சேரி தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே கிடைத்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமைகளை முக்கியமாக ஆற்ற வேண்டும்.
பத்து விழுக்காடு வாக்களிக்க முடியாத நிலையிலிருந்தாலும். 15 விழுக்காடு வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதைத் தவிர்த்து விடுகின்றனர். இவர்கள் வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.