தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dmk Candidate List 2024: திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! யார் யாருக்கு இடம் தெரியுமா?

DMK Candidate List 2024: திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! யார் யாருக்கு இடம் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Mar 19, 2024 09:29 AM IST

”வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது”

திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்
திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திமுக போட்டியிடும் தொகுதிகள்!

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம்!

வடசென்னை தொகுதியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகனும் தற்போதைய எம்.பியுமான கலாநிதி வீராசாமிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகளும், தற்போதைய எம்பியுமான தமிழச்சி தங்கபாண்டியனுக்கும், மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

அரக்கோணம்!

அரக்கோணம் தொகுதியை பொறுத்தவரை தற்போதைய எம்.பி ஜெகத்ரட்சகனுக்கே மீண்டும் போட்டியிட கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும், முன்னாள் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு சீட் தரப்படலாம் என கூறப்பட்ட நிலையில், ஜெகத்ரட்சகனையே போட்டியிட வைக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தருமபுரி

தருமபுரி தொகுதியை பொறுத்தவரை சிட்டிங் எம்பி செந்தில் குமார் பெயருடன், வழக்கறிஞர் ஆ.மணியின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இவருக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் தொகுதியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை தவிர வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால் அவருக்கே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி தொதியில் சிட்டிங் எம்பியாக உள்ள கவுதம சிகாமணிக்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சேலத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் சிவலிங்கம் பெயரும் பரிசீலனையில் உள்ளது.

ஈரோடு

ஈரோடு தொகுதியில் உதயநிதி ஆதரவு பெற்றுள்ள பிரகாஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சேலம்

சேலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மற்றும் பி.கே.பாபு ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

கோவை

கோவையில் மநீமவில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தொகுதியை பொறுத்தவரை சிட்டிங் எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் துணை மேயராக உள்ள அஞ்சுகம் பூபதி பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளது.

தென்காசி

தென்காசி தொகுதியை பொறுத்தவரை சிட்டிங் எம்பி தனுஷ்குமார், துரை, முத்து செல்வி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

ஆரணி

ஆரணி தொகுதியில் தரணி வேந்தன் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

திமுக உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்:-

வடசென்னை- கலாநிதி வீராசாமி

தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புதூர் - டிஆர்.பாலு

காஞ்சிபுரம் - செல்வம்

அரக்கோணம்- ஜெகட்ரட்சகன்-வினோத் காந்தி

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

வேலூர்- கதிர் ஆனந்த்

தருமபுரி - செந்தில் குமார்- வழக்கறிஞர் ஆ.மணி

பெரம்பலூர் - அருண்நேரு

கள்ளக்குறிச்சி - கவுதமசிகாமணி - சிவலிங்கம்

ஈரோடு - பிரகாஷ்

சேலம் - செல்வகணபதி - பி.கே.பாபு

நீலகிரி - ஆ.ராசா

கோவை - மகேந்திரன்

தஞ்சாவூர்- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்- அஞ்சுகம் பூபதி

தென்காசி - தனுஷ்குமார் - துரை - முத்துசெல்வி

ஆரணி - தரணி வேந்தன்

தூத்துக்குடி - கனிமொழி

தேனி - தங்கத் தமிழ்ச்செல்வன் 

ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. 

நாளை காலை திமுக வேட்பாளர்களை அறிவிக்கும் மு.க.ஸ்டாலின் அக்கட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையையும் வெளியிடுகிறார். 

WhatsApp channel