உலகக் கோப்பை அதிக விக்கெட்டுகள்
கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்புடன்
பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியம்.
அதிலும், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற
தொடர்களில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக மிக
அவசியம் என்றால் அது மிகையல்ல. உலகக் கோப்பையை
பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 39
ஆட்டங்களில் விளையாடி 71 விக்கெட்டுகளை
கைப்பற்றியிருக்கிறார். இவர் 1996-2007 வரை விளையாடி
இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் மொத்தம்
1955 பந்துகளை வீசியிருக்கிறார். அடுத்த இடத்தில்
இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் உள்ளார்.
இவர் உலகக் கோப்பையில் 40 ஆட்டங்களில் விளையாடி 68
விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.மொத்தம் 2061 பந்துகளை
வீசியிருக்கிறார். இவர் 1996-2011 காலகட்டத்தில்
விளையாடியிருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த மலிங்கா
2007 முதல் 2019 வரை 29 ஆட்டங்களில் விளையாடி 1394
பந்துகளை வீசியிருக்கிறார். மொத்தம் 56 விக்கெட்டுகளை
உலகக் கோப்பையில் கைப்பற்றியிருக்கிறார். இவரது பெஸ்ட்
6/38.
அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் உள்ளார்.
இவர் 1987 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் உலகக்
கோப்பையில் 38 ஆட்டங்களில் விளையாடி 1947 பந்துகளை
வீசியிருக்கிறார். மொத்தம் 55 விக்கெட்டுகளை
கைப்பற்றியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 2015-
2019 காலகட்டத்தில் உலகக் கோப்பையில் 18 ஆட்டங்களில்
விளையாடி 49 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இவரது
பெஸ்ட் 6/28.
2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா பவுலர் ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை அள்ளிய பவுலர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நியூசிலாந்து வீரர் ஃபெர்குசன் 2வது இடத்தில் உள்ளார். இவர் 21 விக்கெட்டுகளை அள்ளினார். இங்கிலாந்து பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட்டுகளையும் வங்கதேச வீரர் முஸ்தஃபிகுர் ரகுமான் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கின்றனர். மிட்செல் ஸ்டார்க் 554 பந்துகளை வீசி 502 ரன்களை விட்டுக் கொடுத்தார். இவரது பெஸ்ட் 5/26. ஃபெர்குசன் 502 பந்துகளை வீசி 409 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 605 பந்துகளை வீசி 461 ரன்களை விட்டுக் கொடுத்தார். இவரது பெஸ்ட் 3/27.

வீரர் | அணிகள் | விக்கெட்டுகள் | சராசரி | ஓவர் | ரன்கள் | சிறந்த பவுலிங். | எகானமி | ஸ்டிரைக் ரேட் | 3 விக்கெட்டுகள் | 5 விக்கெட்டுகள் | மெய்டன்கள் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() | IND | 24 | 10 | 48 | 257 | 7/57 | 5 | 12 | 1 | 3 | 4 |
2 | ![]() | AUS | 23 | 22 | 96 | 515 | 4/8 | 5 | 25 | 5 | 0 | 1 |
3 | ![]() | SL | 21 | 25 | 78 | 525 | 5/80 | 6 | 22 | 3 | 1 | 4 |
4 | ![]() | IND | 20 | 18 | 91 | 373 | 4/39 | 4 | 27 | 2 | 0 | 9 |
5 | ![]() | SA | 20 | 19 | 63 | 396 | 4/44 | 6 | 19 | 4 | 0 | 1 |
6 | ![]() | PAK | 18 | 26 | 81 | 481 | 5/54 | 5 | 27 | 2 | 1 | 3 |
7 | ![]() | SA | 17 | 26 | 69 | 450 | 3/31 | 6 | 24 | 2 | 0 | 3 |
8 | ![]() | IND | 16 | 24 | 93 | 398 | 5/33 | 4 | 35 | 1 | 1 | 4 |
9 | ![]() | AUS | 16 | 28 | 93 | 449 | 3/38 | 4 | 34 | 1 | 0 | 8 |
10 | ![]() | NZ | 16 | 28 | 92 | 449 | 5/59 | 4 | 34 | 1 | 1 | 4 |
11 | ![]() | AUS | 16 | 33 | 87 | 528 | 3/34 | 6 | 32 | 2 | 0 | 2 |
12 | ![]() | PAK | 16 | 33 | 79 | 533 | 3/43 | 6 | 29 | 3 | 0 | 1 |
13 | ![]() | NED | 16 | 30 | 67 | 487 | 4/62 | 7 | 25 | 2 | 0 | 0 |
14 | ![]() | SA | 15 | 24 | 89 | 370 | 4/46 | 4 | 35 | 1 | 0 | 1 |
15 | ![]() | IND | 15 | 28 | 95 | 424 | 2/7 | 4 | 38 | 0 | 0 | 2 |
செய்தி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
இதுவரை உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை
எடுத்த பவுலர் யார்?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்ராத். இவர் மொத்தம் 71 விக்கெட்டுகளை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எடுத்திருக்கிறார்.
2019 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த
பவுலர் யார்?
ஆஸ்திரேலியா பவுலர் மிட்செல் ஸ்டார்க். இவர் மொத்தம் 27 விக்கெட்டுகளை எடுத்தார்.
2019 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த
இந்திய பவுலர் யார்?
2019 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர் பும்ரா. அவர் 18 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதுவரை உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை
எடுத்த இந்திய பவுலர் யார்?
இந்தியாவின் ஜாகீர் கான், 2003-2011 வரை 23 ஆட்டங்களில் விளையாடி 44 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.