தமிழ் செய்திகள்  /  Cricket  /  Bcci Questions Dravid Rohit For World Cup Final Loss Head Coach Blames Pitch Read More

BCCI: ‘உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோற்றது ஏன்?’-டிராவிட், ரோகித்திடம் பிசிசிஐ கேள்வி

Manigandan K T HT Tamil
Dec 02, 2023 02:46 PM IST

அகமதாபாத் ஆடுகளத்தை டிராவிட் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகளம் மாறவில்லை என்று இந்திய தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் வீடியோ கால் மூலம் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் . விடுமுறையில் லண்டனில் இருந்த அவர், வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டார். உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று, போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அணிகளில் ஒன்றாக இந்தியா இருந்தது, ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ODI, T20I மற்றும் டெஸ்ட் அணிகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் எதிர்கால நடவடிக்கை பற்றிய யோசனையைப் பெறுவதும் சந்திப்பின் மற்றொரு நிகழ்ச்சி நிரலாகும்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் ஆஷிஷ் ஷெலார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

அப்போது உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளத்தை டிராவிட் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகளம் மாறவில்லை என்று டிராவிட் கூறினார். 

இதே ஆடுகளத்தில் பாகிஸ்தான் வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டியில் ஆஸி.,யிடம் தோற்றது. ஆனால், அதற்கு டாஸும் முக்கியப் பங்கு வகித்ததாக தெரிகிறது.

ஆடுகளம் மெதுவானதாக இருந்தது என்பது உண்மைதான் என்றாலும், ஆஸி., வீரர்களின் செயலும் சிறப்பாகவே இருந்தது.

உள்ளூர் கியூரேட்டரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் தேர்வு செய்யப்பட்டது. உலகக் கோப்பையில் நாக் அவுட் போட்டிகளுக்கு புதிய ஆடுகளத்தை தயாரிப்பதை ஐசிசி விதிகள் எதுவும் கட்டாயமாக்கவில்லை என்றாலும், பொதுவாக, புதிய ஆடுகளம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இந்த உலகக் கோப்பைக்கான அனைத்து நாக் அவுட் போட்டிகளும் பயன்படுத்தப்பட்ட பிட்ச்களில் நடத்தப்பட்டன.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவுவதற்காக இறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தில் குறைவாக நீர் பாய்ச்சப்பட்டது, ஆனால் அது இந்தியாவுக்கு அது சாதகமாக அமையாமல் போனது. ஆடுகளம் அதிக திருப்பத்தை வழங்கவில்லை, ஆனால் மிகவும் மெதுவாக இருந்தது, 

 

IPL_Entry_Point