உலகக் கோப்பை அதிக ரன்கள்
கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்புடன்
பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியம்.
அதிலும், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற
தொடர்களில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்புடன்
பேஸ்ட்மேன்களின் பங்களிப்பு அவசியமானதாகும். கடந்த
உலகக் கோப்பையில் அதிக ரன்களை எடுத்த வீரர் ரோகித்
சர்மா. அவர் 9 ஆட்டங்களில் விளையாடி 648 ரன்களை
எடுத்தார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின்
டேவிட் வார்னர் இருக்கிறார். அவர் 647 ரன்களை குவித்தார்.
மொத்தம் 10 ஆட்டங்களில் அவர் விளையாடினார். அடுத்த
இடத்தில் வங்கதேச பேட்ஸ்மேன் ஷாகிப் அல் ஹசன்
இருக்கிறார். அவர் 606 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த
இடங்களில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்,
இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர்.
உலகக் கோப்பையில் அதிக ரன்களை இதுவரை எடுத்த பேட்ஸ்மேன்களில் கம்பீரமாக முதலிடத்தில் இருப்பது இந்தியர் தான். அவர் வேறு யாரும் இல்லை. சச்சின் டெண்டுல்கர் தான். அவர் 1992ம் ஆண்டிலிருந்து 2011 வரை உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 45 ஆட்டங்களில் விளையாடி 2278 ரன்களை குவித்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் 46 ஆட்டங்களில் விளையாடி 1743 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர்.
உலகக் கோப்பையில் அதிக ரன்களை இதுவரை எடுத்த பேட்ஸ்மேன்களில் கம்பீரமாக முதலிடத்தில் இருப்பது இந்தியர் தான். அவர் வேறு யாரும் இல்லை. சச்சின் டெண்டுல்கர் தான். அவர் 1992ம் ஆண்டிலிருந்து 2011 வரை உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 45 ஆட்டங்களில் விளையாடி 2278 ரன்களை குவித்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் 46 ஆட்டங்களில் விளையாடி 1743 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர்.
வீரர் | அணிகள் | ரன்கள் | ஸ்டிரைக் ரேட் | ஆட்டங்கள் | இன்னிங்ஸ் | நாட் அவுட் | அதிகபட்ச ஸ்கோர் | சராசரி | 30கள் | அரைசதங்கள் | சதங்கள் | சிக்ஸர்கள் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | Virat Kohli | IND | 765 | 90 | 11 | 11 | 3 | 117 | 95 | 0 | 6 | 3 | 9 |
2 | Rohit Sharma | IND | 597 | 125 | 11 | 11 | 0 | 131 | 54 | 5 | 3 | 1 | 31 |
3 | Quinton de Kock | SA | 594 | 107 | 10 | 10 | 0 | 174 | 59 | 1 | 0 | 4 | 21 |
4 | Rachin Ravindra | NZ | 578 | 106 | 10 | 10 | 1 | 123* | 64 | 2 | 2 | 3 | 17 |
5 | Daryl Mitchell | NZ | 552 | 111 | 10 | 9 | 1 | 134 | 69 | 2 | 2 | 2 | 22 |
6 | David Warner | AUS | 535 | 108 | 11 | 11 | 0 | 163 | 48 | 1 | 2 | 2 | 24 |
7 | Shreyas Iyer | IND | 530 | 113 | 11 | 11 | 3 | 128* | 66 | 1 | 3 | 2 | 24 |
8 | KL Rahul | IND | 452 | 90 | 11 | 10 | 4 | 102 | 75 | 3 | 2 | 1 | 9 |
9 | Rassie van der Dussen | SA | 448 | 84 | 10 | 10 | 1 | 133 | 49 | 0 | 2 | 2 | 8 |
10 | Mitchell Marsh | AUS | 441 | 107 | 10 | 10 | 1 | 177* | 49 | 1 | 1 | 2 | 21 |
11 | Aiden Markram | SA | 406 | 110 | 10 | 10 | 1 | 106 | 45 | 1 | 3 | 1 | 9 |
12 | Dawid Malan | ENG | 404 | 101 | 9 | 9 | 0 | 140 | 44 | 2 | 2 | 1 | 9 |
13 | Glenn Maxwell | AUS | 400 | 150 | 9 | 9 | 3 | 201* | 66 | 2 | 0 | 2 | 22 |
14 | Mohammad Rizwan | PAK | 395 | 95 | 9 | 8 | 2 | 131* | 65 | 4 | 1 | 1 | 5 |
15 | Ibrahim Zadran | AFG | 376 | 76 | 9 | 9 | 1 | 129* | 47 | 1 | 1 | 1 | 5 |
செய்தி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
உலகக் கோப்பையில் அதுவரை அதிக ரன்களை எடுத்த
வீரர் யார்?
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் 2278 ரன்களை உலகக் கோப்பையில் இதுவரை பதிவு செய்திருக்கிறார்.
2019 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்
யார்?
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா. அவர் மொத்தம் 648 ரன்களை குவித்தார்.
உலகக் கோப்பையில் இதுவரை அதிக ஸ்கோர்கள் பதிவு
செய்த டாப் 5 வீரர்கள் யார்?
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்ககாரா, லாரா, ஏபி டிவில்லியர்ஸ்.