தமிழ் செய்திகள்  /  Cricket  /  Icc Rates Five Pitches In World Cup 2023 Are Average

World Cup 2023: உலகக் கோப்பை தொடரில் 5 ஆடுகளங்கள் சுமார் தான்! ஐசிசி வெளியிட்ட பகீர் தகவல் - எந்தெந்த போட்டிகள் மோசம்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 08, 2023 03:10 PM IST

உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா விளையாடிய போட்டிகளில் நான்கு ஆடுகளங்கள் சுமார் தான் என ஐசிசி தெரிவித்துள்ளது. மொத்தமாக இந்த சுமார் ரக லிஸ்டில் 5 ஆடுகளங்கள் இடம்பிடித்துள்ளன.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரிலியா அணி வென்ற ஆறாவது முறையாக சாம்பியன் ஆனது.

உலகக் கோப்பை தொடரை நடத்திய இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், கோப்பையை மூன்றாவது முறையாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் ரசிகர்களை மைதானத்துக்கு வர வைத்ததில் இருந்து, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராக, சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்ற மைதானங்களின் ஆடுகளங்களில் தரம் குறித்து தற்போது ஐசிசி தெரிவித்துள்ளது. அதன்படி உலகக் கோப்பை போட்டிகள் விளையாடப்பட்ட மைதானங்களில் 5 ஆடுகளங்கள் சுமார் என ஐசிசி மதிப்பிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அரை இறுதியில் மோதிய கொல்கத்தா ஆடுகளம், மற்றும் இறுதிப் போட்டி ஆடுகளமும் அடக்கம்.

இவற்றுடன், இந்தியா - ஆஸ்திரேலியா சென்னையில் விளையாடிய ஆடுகளம், இந்தியா - தென் ஆப்பிரிக்கா கொல்கத்தாவில் விளையாடிய ஆடுகளம், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஆடுகளம், இந்தியா - இங்கிலாந்து லக்னோவில் மோதிய ஆடுகளம் ஆகியவை சுமார் என்று ஐசிசி மதிப்பெண் கொடுத்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point