தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sachin Tendulkar And Yuvraj Singh: ஓய்வுக்கு பிறகு பார்ம் குறையாத சச்சின், யுவராஜ்! கண்காட்சி கிரிக்கெட்டில் அபார ஆட்டம்

Sachin Tendulkar And Yuvraj Singh: ஓய்வுக்கு பிறகு பார்ம் குறையாத சச்சின், யுவராஜ்! கண்காட்சி கிரிக்கெட்டில் அபார ஆட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2024 01:43 PM IST

ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்களான சச்சின் டென்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் கண்காட்சி போட்டியில் மோதிக்கொண்டனர். ஓய்வுக்கு பிறகும் இந்த இருவரும் தங்களது அபார பேட்டிங்கை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். இந்த போட்டியிலும் சச்சின் விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தி அசத்தினார்.

ஜாம்பவான்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் சச்சின் டென்டுல்கர், யுவராஜ் சிங்
ஜாம்பவான்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் சச்சின் டென்டுல்கர், யுவராஜ் சிங்

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மொத்தம் 24 ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்றனர். இதில் One World அணிக்கு தலைமை தாங்கிய சச்சின் டென்டுல்கர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து யுவராஜ் சிங் தலைமையிலான One Family முதலில் பேட் செய்தது. இந்த அணியில் டேரன் மேடி அரைசதமடித்து 51 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் யுவராஜ் சிங் தனது பாணியில் அதிரடி காட்டி 23 ரன்கள் எடுத்தார்.

20 ஓவரில் யுவராஜ் சிங் அணி 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. சச்சின் அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்பி சிங், அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

இதன் பின்னர் 181 ரன்களை சேஸ் செய்த சச்சின் டென்டுல்கரின் One World அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடி காட்டிய சச்சின் 27 ரன்கள் எடுத்து முரளிதரன் சுழலில் சிக்கினார்.

தென் ஆப்பரிக்காவின் ஆல்விரோ பீட்டர்சன் சிறப்பாக பேட் செய்து அரை சதத்தை பூர்த்தி செய்து 74 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட் செய்த இர்பான் பதான் சிக்ஸரை பறக்கவிட்டு அணியை வெற்றி பெற செய்தார்.

ஓய்வுக்கு பிறகு ஜாம்பவான் வீரர்கள் பேட்டிங், பவுலிங்கில் வெளிப்படுத்திய பார்ம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point